Hot Posts

6/recent/ticker-posts

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்! இரண்டு வருட சிறை தண்டனை!!

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதமும், இரண்டு வருட சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

மோட்டார் வாகன விதிகளில் மாற்றம் செய்யக்கோரும் இப்புதிய மசோதாவின்படி சீட்பெட் அணியாமல் கார் ஓட்டினாலோ, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓடடினாலோ, முதல் முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

இதேபோல் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்தாமல் செல்வோர் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்துவோர் மீண்டும் விதிகளை மீறினால் அபராதம் ரூ.1500 வரை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால் அவர்கள் மது அருந்திய அளவுக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை அளிக்கவும் புதிய மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

செல்போனில் பேசியப்படியே வாகனம் ஓட்டினால் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.