
டாஸ் வென்ற வங்காளதேசம் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹபீஜ்,ஜம்ஷத் இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தனர்.ஜம்ஷத் 54 ரன்களில் வெளியேறினார்.இதன் பின்பு வந்த வீரர்கள் அரங்கில் நிலைத்து நின்று ஆடவில்லை.தொடக்க ஆட்டக்காரர் ஹபீஜ் 127 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் அதிரடி மன்னன் அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
உமர் குல் 25 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது.
தற்பொழுது 38 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து சற்று தடுமாறி வருகிறது.
Social Plugin