ஆசிய கோப்பைக்கான லீக் போட்டியில் நாளை இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இலங்கை நாளை கட்டாயம் வெற்றிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது..
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர், டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நாளை பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோத உள்ளன.
கடந்த 11ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான், தொடர்ந்து வெற்றியை பெறும் எண்ணத்தில் உள்ளது. அதேபோல நேற்று இந்தியாவிடம் 50 ரன்களில் தோல்வி அடைந்த இலங்கை, நாளை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி:
பாகிஸ்தானை பொறுத்த வரை பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் பேட்டிங்கில் பின்தங்கி காணப்படுகிறது. உமர் குல், சயீத் அப்ரிடி , சயீது அஜ்மல் ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதால், இலங்கை பேட்டிங் வரிசை சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.
ஆனால் பேட்டிங்கில் உமர் அக்மல் கடந்த 5 போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அசாத் ஷபீக் கடந்த 7 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார். அதிரடி அப்ரிடி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் பேட்டிங்கில் திறமை காட்ட வேண்டியுள்ளது.
இலங்கை அணியின் பேட்டிங் நம்பிக்கை அளிக்கிறது. சங்கக்காரா, ஜெயவர்த்தனே, தில்ஷன், திருமன்னே, தரங்கா என்ற நீண்ட பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். ஆல்- ரவுண்டர் ஆஞ்சிலோ மேத்யூஸ் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாடமாட்டார் என்று கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
ஆஞ்சிலோவுக்கு பதிலாக சவுரங்க லக்மல் அணியில் சேர்த்து கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. பந்துவீச்சாளர் மலீங்கா நாளைய போட்டியி்ல் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Plugin