இந்த நாட்டின் குடிமகன் ஒருவர் ரேசன் கடையில் வேலை செய்யும் பணியாளிடம் போய் சக்கரை எப்போது போடுவீங்க...? என்று கேட்டால், தெரியாது என்றுதான் பதில் சொல்லுவார்.
நேத்து போட்டிங்கலாமே...? என்று கேட்டால்... ஆமாம், இப்ப தீந்து போச்சு என்று தான் சொல்லுவார். இதை எல்லோரும் கேட்டு பழகி போன வார்த்தைகளா தான்.
இனி ரேசன் கடை விற்பனையாளர் அப்படி சொல்லி தப்பிக்க முடியாது. தருமபுரி மாவட்ட பொது விநியோகத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடையின் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில்: கடையில் விற்பனையில் இருக்கும் பொருட்களின் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், பருப்பு, எண்ணை வகையை சேர்ந்த உணவுப்பொருட்கள் வேண்டும் என்று மக்கள் யாராவது வந்து கேட்டால் அவர்களுக்கு இல்லை என்று சொல்லி அனுப்ப கூடாது.
அத்தியாவிசியமான உணவுப்பொருட்களை மக்கள் கேட்டு வரும் போது அவர்கள் என்ன பொருள் கேட்டார்கள் என்ற விபரத்தை தனிப்பதிவேட்டில் எழுதி வத்துக்கொண்டு, பொருள் கேட்டு வந்த பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டுதான் அவர்களை அனுப்ப வேண்டும் என்றும், இந்த பதிவேட்டை ஒவ்வொரு வாரமும் வட்ட வழங்கல் அலுவலரின் பார்வைக்கு கொண்டுவரவேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், மக்கள் தேவை என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் அவற்றை பொது விநியோகத்துரையினர் கொள்முதல் செய்யவும் வசதியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.
எப்படியோ, கையெழுத்து கூட போட தெரியாத இந்நாட்டு “மன்னர்”களின் வார்த்திக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அரசு நினைத்துள்ளது நல்ல முன்னேற்றம்.
Social Plugin