Hot Posts

6/recent/ticker-posts

வாலிபர்களின் வழிகாடடுதலும், வழி முறைகளும்!!

மனித வாழ்வில் பல காலக்கட்டங்கள் குழந்தை பிறக்கும் போது ஒரு கட்டம் பிறகு பாலகப் பருவம், பிறகு இளமை பருவம், பிறகு முதுமை காலங்கள. 

இவைகளின் விலைமதிக்க முடியாத காலம்  இளமை பருவம்  குழந்தையில் கற்பது எழுதப்படாத காகிதம் போன்றது. இளமையில் கற்பது எழுதப்பட்ட காகிதத்தை போன்றது எழுதப்பட்ட காகிதம் எப்போதும் உதவியாக இருக்கும் இளமை பருவம் வாழ்வின் ஒருமுறை தான் வரும் அதை தவறுவிட்டவர்கள் வாழ்வை தவறிவிட்டவர்கள்அவர்கள் .இளமையில் நல்ல பழக்க வழக்கம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேணடிய ஒழுக்க முறைகள் இருக்கிறது உன்னிடம் ஐந்து விஷயங்கள் வருவதற்க்கு முன் ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில்   பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அவை

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
1.மரணம் வரும்முன் வாழ்க்கையும்.
2.நோய் வருமுன் சுகத்தையும்.
3.அதிக வேலை வருமுன் ஓய்வுவையும்.
4.முதுமை வரும்முன் இளமை பருவமும் .
5.வறுமை வருமுன் செல்வ நிலையும் ஆகும்.

இளமை பருவத்தில் இறைவனை பற்றி அல்லாஹ்வின் சிந்தனை ஒவ்வொரு வாலிபர்களுக்கும் இருக்க வேண்டிய பண்பு அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் எவ்வளவு பெரிய பதவியிருந்தாலும் தவறு நடக்காது இன்று வாலிபர்களின் உள்ளத்தில் தவறான சிந்தனை. 

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மனிதர்களின் உடலில் ஒரு பகுதி உள்ளது அது சீராக இருந்தால் மற்ற அனைத்தும் சீராக இருக்கும் அந்த உள்ளம் சீர் கெட்டுவிட்டால் மற்ற அனைத்தும் சீர்கெட்டு விடும் அதனால் வாலிபர்களில் உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் ஏற்பட்டுவிட்டால் எந்த சக்தியைக் கொண்டும் அவர்களை வழி தவறச் செய்யமுடியாது ஒரு பெண் வருகிறாள் அந்த பெண்ணை பார்க்காமல் அல்லாஹ்வின் அச்சத்தால் பார்க்காமல் இருந்தால் அல்லாஹ்வின் நெருக்கம் ஏற்படும் இது எதைக் கொன்டு நடக்கும் அல்லாஹ்வின் அச்சம் ஆனால் இன்று வாலிபர்கள் தினசரி தொழுகையை எந்த அளவு தொழகிறார்கள் தொழுகை என்பது சில நேரம் தான் அதையே செய்ய முடியவில்லையே!   

வாலிபர்களுக்கு சில படிப்பினை விஷயங்களை குர்ஆனில் கூறுகறான் ஹதீஸ் அதை பார்த்து நம் வாழ்வில் வழிகாட்டியாக அமைத்தால் நாமும் நமது வாலிப சமுதாயமும் சுவனபதிக்கு தயாராகும் குகைவாசிகள் அந்த அனியாயக்காரன் அரசனிடம் பேசிய பேச்சையும் அந்த வாலிபர்களின் இறையச்சத்தை பற்றியும் அல்லாஹ் கஹ்பு சூராவில் கூறுகிறான் அதனால் குகை வாசிகளின் வரலாறும் சூரா யூசுப் வரலாறும்  ஒவ்வொரு வாலிபர்களும் பார்த்து படிப்பினை பெற வேண்டும்

அந்த இளைஞர்கள் அக்குகையில் ஒதுங்கிய நேரத்தில் எங்களுடைய ரப்பே! உன்னிடத்திலிருந்து ரஹ்மத்தை எங்களுக்கு நீ அமைத்துக் தருவாயாக என்று பிராத்தித்துக் கூறினார்கள் ஆகவே அக்குகையில் எண்ணப்பட்ட பல ஆண்டுகளாக அவர்கள் தூங்குவதற்க்கு அவர்களின் காதுகளை சப்தங்கள் கேட்க்காதவாறு நாம் தட்டிவிட்டோம் (சூரா கஹ்ப் 10.11)

யூசுப் நபியின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம் பல அதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்:

 ஒரு பெண் தனது அழகு. குணம். கவர்ச்சி. செல்வ செழிப்பு. போன்றவற்றை காண்பித்து விபச்சாரத்திற்காக அழைக்கும் போது நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்று கூறி அக்கொடிய தீமையிலிருந்து தன்னை இறையச்சத்தின் மூலமாக ஒதுங்கினாhகள் அவர் எந்த பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அவள் அவர் மீது விருபபங் கொண்டு கதவுகளை தாழிட்டு கொண்டு தன் விருப்பத்திற்க்கு இணங்குமாறு வாரும் என்று அழைத்தாள் அதற்கு அவர் மறுத்து அல்லாஹ் இத்தீய செயலிலிருந்து என்னை காத்தருள்வாயாக என்று கூறினார்கள் தவறான வழியில் பாலியல் சுகத்தையும் அடைந்துகொள்வதற்க்காக வாய்ப்பும் வசதியும் தன் பக்கத்தில் இருந்தும் தேடியும் துரத்தியும் வந்த போது அல்லாஹ்வின் அச்சத்தால் அல்லாஹ்வின் அருளாhல் தன் கற்பை காப்பாற்றி கொண்டார்கள்
அவர் (யூசுப்)தம் வாலிபத்தை அடைந்தும் அவருக்கு நாம் ஞானத்தையும் கல்வியையும் கொடுத்தோம் இவ்வாறு நாம் நன்மை செய்வோருக்கு நற்கூலி வழங்குகின்றோம்.
(சூராயூசுப்12)
அதே போன்று வாலிப சமுதாயமே சரியாக வழிகாட்டுதலும் படி வாழ்வதற்க்கு அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
 ஆக்கம்,
 நஜ்முதீன் (தீனியாத் ஆசிரியர்) காதீர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 
 அதிரை.