ஐபிஎல் 5 தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறப்பான பீல்டிங் மற்றும் பந்துவீ்ச்சே காரணமாக இருந்தது என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
ஐபில் 5 தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு சிறப்பான பந்துவீச்சும், பீல்டிங்கும் தான் காரணம் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
அணியின் வெற்றிக்கு சிறந்த பந்துவீச்சு தான் காரணம். இதேபோல அடுத்த வரும் போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சு இருக்கும் என்று நம்புகிறேன். அதேபோல கடந்த சில போட்டிகளில் மோசமாக பீல்டிங் செய்தோம். ஆனால் நேற்று அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது.
கடந்த சில போட்டியில் எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் முதல் 6 ஓவர்களிலேயே சில விக்கெட்களை வீழ்த்திவிட்டோம். இதுதான் அணியின் வெற்றி பெரும் உதவியாக இருந்தது. நேற்று பெற்ற வெற்றியின் மூலம் அணிக்கு ஒரு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இதேபோல உற்சாகத்துடன் அடுத்து வரும் போட்டிகளிலும் ஆடுவோம் என்றார்.

Social Plugin