குழந்தை பருவம் இணைத்து உன்னையும் என்னையும் விளையாட்டில்,
முகம்பார்த்து உறங்கினோம் அன்னையின் தாலாட்டில் அன்று
அடையாளம் தெரியாத வயது அது
ஆசைகள் ஏதுமில்லை.
ஆனால் ஆனந்தம் பொழிந்தது எங்கள் புன்னகை நிழலில் அன்று
ஆம் விதி விளையாடியது விடலைப் பருவத்தில்
விண்மீன் கூடகண்ணசைத்து.
புரியவில்லை புதிருக்கான விடை அன்று,
அவள் புன்னகை காட்டியது அன்பு என்று.ஆராயிந்தேன் ஆயிரம் நாட்கள் அவளைப்பற்றி அன்று
காலங்கள் உருண்டோடியது அவள் வயதும் தெரிந்தது இன்று.
அன்பு மாறியது அலைகடலாய் அவள்மீது
ஆயிரம் வார்த்தைக்கு இடையில் பிறந்ததோ
பருவம் தாண்டிய அன்பு அவள் மீது இன்று.
காவியம்கண்ட கனவுகள் குழந்தைப் பருவம் அன்று,
கண்கள் கண்ட கனவுகள் மனைவி இன்று.
போதுமா இது,பொறுத்த பொறுமைக்கு
அன்பாய் கிடைத்த பரிசு
ஆம்!! இணைத்து இருமனமும்
நடந்ததோ ஓர் திருமணம்.
யார் இவர்கள்?
அடையாளம் தெரியாத தமிழும் கன்னடத்துப் -பட்களும்
பிறந்த தேசம் ஒன்று தான் பிறப்பில்
இவர்கள் நெடுந்தூரத்து பாசப் பறவைகள்
ஆனால் இவர்கள் இணைந்ததோ அன்பினால்
புரிந்தவகளுக்கு விடையாகும்,புரியாதவர்களுக்கு புதிராகவும் காட்சி தருபவர்கள் இவர்கள்.
யார் இவர்கள் பொருத்து இருந்து பார்ப்போம்,
பொறுமையுடன் மீண்டும் சிந்திப்போம்...
S.A.இத்ரீஸ் அஹமது M.com,M.A(Eco)
அதிரை.
Social Plugin