Hot Posts

6/recent/ticker-posts

அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது 2012 !!


அதிரையில் பல வருடங்களாக  அதிரையின் அன்றாட செய்திகளை வெளிநாடுகளில் வாழும் அதிரை மக்களுக்கு உடனுக்குடன் அளித்து வரும். அதிரை ஊடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் அதிரை  எக்ஸ்பிரஸ் முன்னதாக அதிரை பள்ளிகளில் அரசு பொது தேர்வில் முதல் முன்று அதிக மதிப்பெண் பெரும் மாணவ,மாணவியருக்கு கல்வி விருது வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.அதன் படி நேற்று 07-06-2012 மாலை 04:30 மணியளவில் அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள சகோதரர் சேகன்னா M.நிஜாம் அவர்களின் வீட்டில்  2011-12 கல்வி ஆண்டுக்கான  அதிரை  எக்ஸ்பிரஸ் கல்வி விருது நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடை பெற்றது.மேலும் இந்நிகழ்ச்சிக்கு முன்னர் நமது சகோதர பதிவாளர் சேகன்னா M.நிஜாம் அவர்களின்  விழிப்புணர்வு பக்கங்கள்' புத்தக வெளியீடு விழாவும் நடைபெற்றது.
nijam1
சகோதரர் சேகன்னா M.நிஜாம் அவர்களின்  விழிப்புணர்வு பக்கங்கள்'புத்தகத்தை பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் வெளியீட்டார். முதல் பிரதியை அதிரை பேருராட்சி தலைவர்S.H.அஸ்லம் அவர்கள்பெற்று கொண்டார்.
nijam2
அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருது
2012-06-07_17.23.20_copy
.+2பொது தேர்வுக்கான முதல் பரிசு 5000ரூபாயை    காதர் மொஹிதீன் பள்ளி மாணவி எம். ஆஃப்ரீன் பானு அவர்களுக்கு அதிரை பேருராட்சி தலைவர் SHஅஸ்லம் அவர்கள் வழங்கினார் 
+2012-06-07_17.24.55_copy
இரண்டாம் பரிசு 3000 ரூபாயை  பேராசிரியர் அப்துல் காதர் மற்றும் பேராசிரியர் பரகத் ஆகியோர் இணைந்து  காதர் மொஹிதீன் பள்ளி மாணவி  எம்.ரிஹானாஅவர்களுக்கு வழகினார்கள்
2012-06-07_17.26.22_copy
முன்றாம் பரிசு 2000 ரூபாயை வக்கீல் முனாப் மற்றும் அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைபின் பொருளாளர் ஆகியோர் இணைந்து  காதர் மொஹிதீன் பள்ளி மாணவி ஜாஃப்ரின்அவர்களுக்கு வழகினார்கள்.
                   பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முதல் முன்று விருதுகள்2012-06-07_17.27.58_copy
பத்தாம் வகுப்புக்கான முதல் பரிசு 3000 ரூபாயை இமாம் ஷாஃபி பள்ளி மாணவிஃபாய்ஜா  அவர்களுக்கு காதர் மொஹிதீன் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ரோசம்மா அவர்கள் வழங்கினார்கள் 
2012-06-07_17.29.12
இரெண்டாம் பரிசு  2000 ரூபாயை  காதர் மொஹிதீன் பள்ளி   மாணவி N. நவ்ரீன்அவர்களுக்கு “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, மற்றும் “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள். மேலும் N. நவ்ரீன் அவர்கள் வாங்கிய  பரிசு பணத்தை  காதர் மொஹிதீன் பள்ளியில் படிக்கும் யாராவது ஏழை மாணவிக்கு அளிக்குக்குமாறு கேட்டுகொண்டார்
2012-06-07_17.31.37
முன்றாம்  பரிசு 1000 ரூபாயை இமாம் ஷாபி  பள்ளி   மாணவி   R. சமீரா அவர்களுக்கு கவிக்காக்க சபீர் மற்றும்  “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது,   ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
                                                      சிறப்பு பரிசுகள் பள்ளியில் முதல் இடம் 
2012-06-07_17.33.10
காதர் பள்ளியில் முதல் இடம் பெற்ற  இஃபாத் ரஹ்மான் அவர்களுக்கு சிறப்பு பரிசாக 1000 ரூபாயைஎஸ். எம். முஹம்மது முஹைதீன் –ஒருங்கிணைப்பாளர் – அதிரை பைத்துல்மால் - S.M.A. அஹமது கபீர் ஆகியோர் இணைந்து வழங்னார்கள்.  மாணவன் இஃபாத்ரஹ்மான் அவர்கள் மல்லிபட்டனத்தை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.
 
2012-06-07_17.34.12
இமாம் ஷாபி பள்ளியில் +2 போதுதேர்த்வில் முதல் இடம் பெற்ற எஸ்.ஃபாத்திமாஅவர்களுக்கு சிறப்பு பரிசு 1000 ரூபாயை V.M. அப்துல் மஜீத் - நிர்வாகி பெரிய ஜும்மாபள்ளிO.K.M. சிபஹத்துல்லாஹ்பொருளாளர் - அதிரை பைத்துல்மால் ஆகியோர் இணைந்து வழகினார்கள்.
 2012-06-07_17.35.02_copy
காதர் மொஹிதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தேர்ச்சி விகிதம்  92.8%  (பன்னிரெண்டாம்வகுப்பு) 98.8% (பத்தாம் வகுப்பு) பரிசுனை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி சிராஜ் அவர்களிடம்  அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைபின் தலைவர் M.M.S  அப்துல் கரீம் அவர்கள் வழங்கினார்கள்.
 2012-06-07_17.35.50
இமாம் ஷாபி மெட்ரிக் மேனிலை பள்ளி தேர்ச்சி விகிதம் 87.9%(பன்னிரெண்டாம்வகுப்பு)   93.3% (பத்தாம் வகுப்பு) பரிசுனை பள்ளி தலைமை ஆசிரியர்  பேராசிரியர் பரகத் அவர்களிடம் பேரூர்ராட்சி தலைவர் S.H.அஸ்லம்  அவர்கள் வழங்கினார்கள்.
 2012-06-07_17.37.24_copy
காதர் மொஹிதீன் ஆண்கள்  மேல் நிலைப்பள்ளி தேர்ச்சி விகிதம்  92.8%  (பன்னிரெண்டாம்வகுப்பு) 98.8% (பத்தாம் வகுப்பு) பரிசுனை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ரோசம்மா அவர்களிடம் வக்கீல் முனாப் அவர்கள்  வழங்கினார்கள்.
 இந்நிகழ்ச்சியில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் M.M.S. சேக் நசுருதீன், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், K.M. பரக்கத் அலி மற்றும் AAMF’ன் செயற்குழு உறுப்பினர்கள், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பேராசிரியர் பரக்கத், வழக்கறிஞர் அப்துல் முனாப், O.K.M. சிபஹத்துல்லா, S.M. முஹம்மது மொய்தீன், அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம், காதிர் முஹைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாணவர்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகள், “தமிழ் அறிஞர்” அதிரை அஹமது, “கணினி தமிழ் அறிஞர்” ஜமீல் M. ஸாலிஹ், “கவிஞர்” சபீர், அதிரை நிருபர் –நெறியாளர், சகோ. நெய்னா தம்பி, அதிரை நிருபர் – அமீர் தாஜுதீன், அதிரை பிபிசி நிர்வாகி முஹம்மது, பதிவர் “அதிரை அன்பு” , அதிரை போஸ்ட் நிர்வாகி ஹிதாயத்துல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 இவ்விழா ஏற்பாட்டினை அதிரை எக்ஸ்பிரஸ் குழு மற்றும் சேகன்னா M.நிஜாம் அவர்கள் மிக சிறப்பாக செய்து இருந்தனர். பரிசு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு அதிரை.இன் வாழ்த்துக்களை தெருவித்து கொள்கிறது. 
.........முபின்......... 
நன்றி: அதிரை.இன்