அதிரை வழியாக செல்லும் குறுகிய ரயில் பாதை திட்டத்தை கிடப்பில் போட்டு புதிய வழிதடத்துக்கு ஆச்சாரமிடும் மத்திய ரயில்வே இலாக்காவின் மீது அதிரை நல்வாழ்வு பேரவையின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கு ஒன்று போடப்பட்டு அதன் மீதான விசாரணையின் போது நீதிபதி இந்த வழக்கு பற்றி மத்திய ரயில்வே இலாக்கா 6 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார் .
ஆனால் ரயில்வே நிர்வாகம் இது வரையிலும் இதற்க்கான பதிலை அளிக்காமல் மௌனம் காத்து புதிய வழித்தடம் அமைப்பதிலேயே மும்முரம் காட்டி வருகிறது .
இதனை கவனத்தில்கொண்டு அதிரை நல்வாழ்வு பேரவையினர் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டனர். இந்த ஆலோசனையில் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கும் வழக்கை துரிதப்படுத்த பேரவையின் வழக்கறிஞரை கேட்டுக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
Social Plugin