ரயில்வே தத்கல் முன்பதிவு நேர மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. திடீர் பயணம் மேற்கொள்ள ரயில் புறப்படுவதற்கு 3 நாட்களுக்குள் தத்கல் முன்பதிவு செய்யலாம் என்ற இருந்ததை சில மாதங்களுக்கு முன்பு 24 மணி நேரமாக ரயில்வே குறைத்தது. முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. வழக்கமான டிக்கெட் கவுன்டர்களிலேயே தத்கல் செய்யும் வசதி உள்ளது. இதனால் தத்கல் முன்பதிவுக்காக முன்பதிவு மையங்களில் முதல் நாள் இரவே வந்து இடம் பிடிக்கும் சூழல் இருந்தது. இதனால் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வருபவர்களும் சிரமப்படுவதாக புகார் எழுந்தது.
தத்கல், 120 நாட்களுக்கு முந்தைய முன்பதிவு என இரண்டையும் கையாளுவது சிரமமாக உள்ளது என்று ஊழியர்களும் புகார் தெரிவித்தனர். அதனால் தத்கல் முன்பதிவு காலை 8 மணிக்கு பதில் தினமும் 10 மணிக்கு தொடங்கும். இது ஜூலை 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முன்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கு பிறகு மற்ற வரிசைகளிலேயே தத்கல் முன்பதிவை செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரி கள் தெரிவித்தனர்.
Social Plugin