Hot Posts

6/recent/ticker-posts

டுவென்டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்: வாசிம் அக்ரம் நம்பிக்கை!!


இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட 12 நாடுகள் கலந்து கொள்ள உள்ளது.
தற்போது பாகிஸ்தான் அணியினர் சிறப்பாக ஆடி வருவதால், டுவென்டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அணியினர் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனர். இம்ரான் நாசிர், அப்துர் ரஸ்ஷாக் போன்ற வீரர்கள் போட்டியின் போக்கையே மாற்றும் திறமை கொண்டவர்கள். எனவே பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்ல முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
நான் டெஸ்ட் போட்டிகளை பார்த்த காலத்தில், ஒரு சிறந்த வீரர் 130 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் உடன் ஒவ்வொரு சிங்கிளுக்கு பிறகும், ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். அப்போது தான் அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தி கொண்டே இருக்க முடியும். ஆனால் தற்போது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நிலைமையே மாறிவிட்டது.
ஓய்வில் உள்ள நான் தற்போது எனது குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பணிகளை இடையில் செய்து வருகிறது. ஆனால் முழுநேர கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்க எனக்கு நேரம் கிடைப்பதில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகியான இன்திக்ஹம் ஆலமை சமீபத்தில் சந்தித்து பேசினேன். வரும் நவம்பர் மாதத்தில் நான் ஓய்வாக இருக்க போவதாக தெரிவித்தேன். எனவே பாகிஸ்தானில் உள்ள இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பை கராச்சியில் நடத்தலாம் என்று தெரிவி்த்தேன். நான் பாகிஸ்தான் 'ஏ' மற்றும் 19 வயதிற்குட்டோருக்கான அணியில் சிறந்த வீரர்களை உருவாக்க விரும்புகிறேன்," என்றார்.