Hot Posts

6/recent/ticker-posts

இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலப்பா!!!

பொதுவாவே ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு சீசன் இருக்குங்க,ஆனா இந்த கொசுத் தொல்லைக்கு மட்டும் சீசனே இல்லங்க.

நம்ம ஊரு அதிரை ல இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல. புதுமனைத் தெரு,புதுத் தெரு போன்ற தெருக்கள் ல கொசுக்கள் அதிகமாக சங்கமிக்கும் இடமாகவே இருக்குங்க.இரவு நேரத்துல தூங்கும் போது காதுல கொயின்,கொயின் னு கத்துதுங்க.இதுனால பெரியவர்களும் சரி,குழந்தைகளும் சரி யாரும் நிம்மதியா தூங்க முடியலங்க.
இந்த கொசுக்கள் தொல்லையால காலரா,டெங்கு,மலேரியா போன்ற கொடிய நோய்களின் அபாயமும் மக்களிடம் இருக்குங்க.

மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்னு ஊர் மக்கள் கேட்டுக்குறாங்க!