Hot Posts

6/recent/ticker-posts

மும்பையில் மெட்ரோ ரெயில் பாலம் இடிந்து 2 பேர் காயம்!!


மும்பையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

இந்நிலையில், மும்பை அந்தேரி-குர்லா சாலையில் உள்ள பிரபல லீலா ஓட்டல் அருகே மெட்ரோ ரெயில் பாதைக்கான பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இன்று, திடீரென்று அதில் 50 அடி நீள கான்கீரிட் கட்டுமானம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். 

தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்த விபத்து காரணமாக அந்தேரி-குர்லா சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் மெட்ரோ ரெயில் பாதை கட்டுமானப் பணியின் போது விபத்து நடப்பது இது இரண்டாவது முறையாகும்.