ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் பிரான்சும் ஒன்று. ஆனால் இப்போது அங்கு பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது. கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் சோசலிச ஆட்சி வந்த பிறகு அங்கு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது.
தற்போது அங்கு 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதுதொடர்பாக அந்த நாட்டு தொழில்துறை மந்திரி மைக்கேல் சபீன் கூறியதாவது:-
பிரான்சில் 30 லட்சம் பேர் வேலை தேடி காத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க நாட்டில் பொருளாதார வளர்ச்சி தேவை. ஆனால் ஐரோப்பிய முடிவுகளே நமது பொருளாதார முடிவுகளாக இருப்பதால் நாம் போராடி வேலையில்லாக் கொடுமையை மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டின் நிலை எவ்வாறு இருக்கும்? என்று யாருக்கும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Social Plugin