கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்துத் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், யுரேனியம் நிரப்ப அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபெமடுத்தது. கடந்த திங்கள்கிழமையன்று கடற்கரையில் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதையடுத்து இன்று கடல் நீரில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , யுரேனியம் நிரப்ப இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் வரும் 20-ந் தேதி யன்று மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
Social Plugin