தென்மேற்கு பருவமழை முடிந்து நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலேயே சென்னை,தஞ்சாவூர் மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளதால் கனமழை பெய்யும்.
கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும்’ என்று வானிலை அதிகாரிகள் கூறினர். சில மாவட்டங்களில் 5 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த குளங்களில் தண்ணீர் அலையடிக்கிறது. ‘குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளதால் கனமழை பெய்யும். கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் காற்று வீசும்’ என்று வானிலை அதிகாரிகள் கூறினர்.
அதிரையில் நேற்று இரவு 10 மணிக்கு பெய்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.தற்பொழுது குளிர் காற்றும் வீசுகிறது. விடிய,விடிய பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
இன்ஷா அல்லாஹ் விரைவில் காணொளியுடன் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படும்....
Social Plugin