வங்க கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் நாகை துறைமுகத்தில் புயல்கூண்டு ஏற்றப்பட்டது. கடல் சீற்றத்துடன் மழை பெய்வதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது சென்னையில் இருந்து 700 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருப்பதால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மழை தொடங்கியது.
நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், கோடியக்கரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தஞ்சை, நாகை பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இந்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையமும், மீன்வள துறையும் எச்சரித்திருந்தது. இதையடுத்து நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 60 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அதிராம்பட்டினம் பகுதிகளில் இன்று காலை கருமேகம் சூழ்ந்து கும்மிருட்டாக காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
அதிரை எங்கும் குண்டும் குழியுமான சாலைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக CMP லேன்,புதுத் தெரு,,காளியார் தெரு,மேலத் தெரு,வாய்கால் தெரு போன்ற இடங்களில் சாலைகள் குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது.இதனை அதிரை பேரூராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்,மேலும் இந்த தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்பதே இந்த தெரு மக்களின் கோரிக்கையாகும்.
மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.குண்டும்,குழியுமாக இருக்கும் சாலையில் சாய்ந்தபடி செல்லும் வாகனம்.
இடம் : CMP லேன் அதிரை.
|
Social Plugin