Hot Posts

6/recent/ticker-posts

முஸ்லிம்லீக் கண்டியூரில் கனிசமானவீடு கட்டுவதர்க்கு பொருப்பேர்ப்பு

கன்டியூர் தீ விபத்து ; கனிசமான வீடுகள் கட்டுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும் !

மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு....

தஞ்சை மாவட்டம், கன்டியூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடங்களையும், குடும்பத்தார்களையும் சந்தித்து  தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், M.L.A அவர்கள் ஆறுதல் கூறி  உயிரிழந்தவர், குடும்பத்திற்கு நிதி உதவியும், வீடிழந்த குடும்பத்திற்கு சில நாட்களுக்கு உணவிற்கான நிதி உதவியும், பாதிக்கப்பட்ட குடும்ப பெண்ணிற்கு நாளை மறுதினம் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு நிதி உதவியும்வழங்கினார்
மேலும். புதிய வீடுகள் கட்டுவதற்கு ஜமாஅத்தின் இறுதி திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு கனிசமான வீடுகள் கட்டுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்கும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், M.L.A அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் அதிரை நஸ்ருதீன் , மாநில செயலாளர்கள் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், மில்லத் முஹம்மது இஸ்மாயில்,மாநில துனைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, தஞ்சை வடக்கு , தெற்கு மாவட்ட தலைவர்களான பி.எஸ்.ஹமீது ஹாஜியார், ஹாஜி முஹம்மது சுல்தான், செயலாளர்கள் பஷீர் அஹமது ரப்பானி, குண்டு ராஜாளி காஸிம், ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம்,மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், ஜூல்பிகார் அஹமது உள்ளிட்ட மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் தீ விபத்து பகுதிகளை பொதுச் செயலாளருடன் இணைந்து பார்வையிட்டு மேற்கண்டு நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசித்தனர்.