Hot Posts

6/recent/ticker-posts

குஜராத்தில்பட்டேல்சமுகப்போராட்டம்

குஜராத்தில் பட்டேல் சமூகப் போராட்டம்..

இட ஒதுக்கீட்டை முடக்க திட்ட மிட்ட சதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கைபரப்பு செயலாளர் காயல் மகபூப்

காவித் தலைவர் அமித்ஷா 2015 ஆகஸ்ட் 6ஆம் தேதி சாதி மாநாட்டில் பங்கேற்க மதுரை வந்தார்.

இந்துத்துவ சிந்தனையாளரான எஸ். குருமூர்த்தியின் தூண்டுதல் துணையோடு தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“நாடு முழுவதும் பல்வேறு சாதிய அமைப்புகள் தங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்க வலியுறுத்தி வரும் சூழலில், தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல;
தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உள்ள 7 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே
பெயரில் அழைக்க வேண்டும் என்ற கௌரவத்துக்காக இம் மாநாடு நடத்தப்படுகிறது.

இடஒதுக்கீடு தேவையில்லை என்ற புதிய சிந்தனையை உருவாக்கும் புதிய மாற்றத்துக்கான தொடக்கமாகவும், இம் மாநாடு அமைந்துள்ளது’’ என குறிப்பிட்டார்.

பா.ஜ.க. தேசிய தலைவரான அமித்ஷா மும்பையில் ஜெயின் சமூகத்தின் வசதியான குடும்பத்தில் 1964ல் பிறந்தவர். பம்பாய் மறுசீரமைப்பு சட்டத்தின்படி 1960 மே 1ல் பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்டு குஜராத் உருவாக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் பணியாற்றிய அமித்ஷா 1985 முதல் நரேந்திர மோடியுடன்
இணைந்து பணியாற்றினார். பா.ஜ.க.வில் இணைந்தார்.

2002ம் ஆண்டு மோடி தலைமையிலான குஜராத் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2002 பிப்ரவரி 27 அன்று கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தீ விபத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கலவரப் பகுதிகளை பார்வையிட்ட பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய், குஜராத் கலவரம் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது என குறிப்பிட்டார்.

இக் கலவரத்தில் அஹமதாபாத் அருகே நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

குல்பர்க் சொசைட்டியில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.
இஹ்ஸான் ஜாப்ரி இல்லத்தில் பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 68 பேர் உயிரோடு தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர்.

மதுரையில் சாதி மாநாட்டில் பங்கேற்று இடஒதுக்கீடு தேவையில்லை என முழங்கியகாவி தலைவர் அமித் ஷா டெல்லி திரும்பியதும் குஜராத்தில் இடஒதுக்கீடு கோரிக்கை ஒலிக்கத் தொடங்கியது.

இம் முறை இடஒதுக்கீடு கேட்டு போராடுபவர்கள் பட்டேல் என்ற பட்டிதார் வகுப்பினர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது முதல்வர் மாதவராவ் சோலங்கி 1980களில்
இடஒதுக்கீட்டை வழங்கியபோது இடஒதுக்கீடு கூடாது என போராடியவர்கள் தான் இந்த பட்டேல் சமூகத்தினர்.

6 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில் சுமார் 1 கோடி பேர் பட்டேல் சமூகத்தினர். அதாவது 15 சதவீதத்தினர் குஜராத்தில் மட்டுமின்றி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உலகின் பல நாடுகளிலும் பெரும் வணிகர்களாக திகழ்கின்றவர்கள்.

‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய பட்டேல் சமூகத்தினர் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், ஆளும் பா.ஜ.க. அரசுக்கு பக்க பலமாக இருக்கின்றவர்கள்.

பா.ஜ.க. வின் 120 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரும், 26 எம்.பி.க்களில் 5 பேரும் பட்டேல் சமூகத்தினர் குஜராத் பெண் முதல்வரும் இச் சமூகத்தை சேர்ந்தவரே.

இந்த சமூகத்தில்தான் 22 வயதே ஆன ஹர்திக் பட்டேல் என்ற பி.காம் பட்டதாரி, பட்டீதார் அனமத் ஆந்தோலன் சமிதி என்ற அமைப்பை தொடங்கி பட்டேல்
சமூகத்தினருக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சிறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

தற்போது பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்.

“குஜராத்தில் 1 கோடியே 80 லட்சம் பட்டேல் சமூகத்தினர் உள்ளோம்; கல்வி வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோரால் வாய்ப்புகள் பறிபோகின்றன. எனவே, பட்டேல் சமூகத்தினரையும் இதர பிற்பட்டோர் பிரிவில் சேர்த்து இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.

பட்டேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பேரணி ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்றது.

இதில் பேசிய குஜராத் ஷத்திரிய தாக்குர் சேனா அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாக்குர் பேசுகையில்,
“குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் 12 சதவீதம் மட்டுமே உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 78 சதவீதம் உஷீமீளனர். பட்டேல் சமூகத்திற்கு ஒரு சதவீதம்இடஒதுக்கீடு வழங்கப்பட்டால்கூட குஜராத் அரசு அடுத்த தேர்தலில் கடும் விளைவுகளை
சந்திக்க நேரிடும்.

பட்டேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட 146 வகுப்பினரும் ஒன்றாக இணைந்ததுள்ளனர்.

முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எதிரிகளாக சித்தரிக்கின்றனர்.

ஆனால் எங்களின் உண்மையான எதிரிகள் யார் என்பது இப்போது புரிகிறது.

இடஒதுக்கீடு தொடர்பாக பட்டேல், பிராமணர், ஷத்ரியர் சமூகங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க 7 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, “பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க முடியாது. இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்க முடியாது’ என குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக ஆதரவு திரட்டி பெரும் பேரணிக்கு அழைப்பு விடுத்தார் ஹார்திக் பட்டேல். அஹமதாபாதில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற பேரணியில் பல லட்சம் பேர் திரண்டனர். பேரணி முடிவடைந்ததும்

வன்முறையில் ஈடுபட்டனர்.பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள்மற்றும் அவர்களின் வீடு, அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. 15 பா.ஜ.க. தலைவர்கள், 3
ஐ.பி.எஸ். அதிகாரிகள் தாக்கப்பட்டனர். காவல் துறையைசேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில்பொதுமக்கள் 9 பேரும் கொல்லப்பட்டனர். 292 பேருந்துகள் எரித்து நாசமாக்கப்பட்டன. ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டன.

பல்லாயிரக்கணக்கில்துணை ரானுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.அரசியல் பின்பலமில்லாத 22 வயது இளைஞரால் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க முடியுமா

என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர்.
எதிர்க்கட்சியான காங்கிரசும் இதை தூண்டியிருக்க முடியாது.

காரணம் அது 3 சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தல்களிலும் குஜராத்தி வரலாறுகளைபடுதோல்வியை சந்தித்துள்ளது.

அப்படியானால் இந்த போராட்டத்தின் நோக்கம் என்ன? யார் இதை பின்பலமாக இயக்குகின்றனர்?

இதற்கு செலவிடும் பெருந்தொகை எங்கிருந்து வருகிறது?

ஏனெனில், போராட்டக்களம் குஜராத் மாநிலம்.

நரேந்திரமோடி பிரதமர் ஆகி விட்டாலும் குஜராத் அரசை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.

அவர் விரல் அசைவில் ஆட்சி நடத்துபவர்தான் ஆனந்தி பெண் பட்டீல்.

பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது என்பது போல் ஒரு உண்மைவெளிச்சத்துக்கு வந்துள்ளது. “சாதி ரீதியான இடஒதுக்கீடே தவறு; இடஒதுக்கீடு
தேவையா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.

இதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார் விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின்.ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவராக பணியாற்றி வந்த எம்.ஜி. வைத்யாவின்
மகன் மன்மோகன் வைத்யா தற்போது ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைமை செய்தித்
தொடர்பாளர்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு
வழங்க வேண்டும். அல்லது இடஒதுக்கீட்டையே ரத்து செய்ய வேண்டும்‘ என்று
ஹர்த்திக் பட்டேல் சொல்வது சரியானதே; ஏனென்றால் சாதி என்பது தேவையற்ற
ஒன்று.

தற்போது எந்த சாதியினரும் பின்தங்கிய நிலையில் இல்லை. எனவே, சாதி
அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும்.

அட்டவணை சாதியினர் (எஸ்.சி.,), மலை சாதியினர் (எஸ்.டி.) மற்றும் இதர
பிற்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் சாதிரீதியாக
வழங்கப்படும் இடஒதுக்கீடு அவசியமற்றது.

தேவைப்பட்டால் எஸ்.சி.,எஸ்.டி.க்களுக்கு
அதிகபட்சம் இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீட்டை நீடிக்கலாம்.
அதற்கு பிறகு சாதி ரீதியிலான இடஒதுக்கீடு என்பதே இருக்கக் கூடாது.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு சமுதாயத்தின் சாதிப்பிரிவை அகற்றுவதற்கு பதிலாக
சாதி பாகுபாட்டை வளர்ப்பதற்கே பயன்படுகிறது.
எனவே, சாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை வழங்குவதை நிறுத்தி விட்டு
பொருளாதார அடிப்படை யிலேயே வழங்க வேண்டும்.

அப்படி வழங்கினால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிராமணர்களும் பயன்பெற முடியும்” என்றார்.

ஆக, பட்டேல் சமூகத்தின் போராட்டத்திற்கு பின்பலமாக இருப்பவர்கள்
இந்துத்துவ அமைப்பினர் என புரிய முடிகிறது. அவர்களது நோக்கம் இடஒதுக்கீடு
கிடைக்க வேண்டும் என்பதல்ல. அது முடக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஏனெனில்,
சங்பரிவார்களுக்கு இடஒதுக்கீடு என்பது ஆகவே ஆகாது.

சமூக நீதி என்பதையே
ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் சங்பரிவார்கள். எனவே தான்,

குஜ்ஜார்களையும்,
ஜாட் இனத்தவர் களையும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் இடஒதுக்கீட்டை
கேட்டு போராடத் தூண்டிய சங்பரிவார்கள் தற்போது பட்டேல் சமூகத்தை கையிலெடுத்துள்ளனர்.

பட்டேல் சமூகம் அரசியலிலும், பொருளாதாரத் திலும், வர்த்தகத்திலும் உச்சத்தில்
இருக்கின்ற சமூகம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் அவர்கள் உயர்ந்த
நிலையில் இருக்கக் கூடியவர்கள்.

அப்படி முற்பட்ட சமுதாயம் இடஒதுக்கீட்டை கேட்டு
போராடுகிறார்கள் என்றால்அந்த சூழ்ச்சியை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவது;

சர்வாதிகார ஆட்சி நடத்தும் நரேந்திர மோடிக்கு செக் வைத்து அவரை தங்கள் கையின் கீழ் கொண்டு வருவது.
இதை புரிந்து கொண்ட காரணத்தால் தான் பட்டேல் சமூகத்திடம் கெஞ்சுகிறார்முதல்வர் ஆனந்தி பென் பட்டேல்.

இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டு உலகமே ஒருமுக
மாக கண்டித்த நிலையிலும் கண் கலங்காத மனமிறங்காத நரேந்திர மோடி,

ஒன்பது பேர் இறந்து விட்டார்கள் என்றதும் அலறுகிறார்; துடிக்கிறார். தொலைக்காட்சிகளில்
தோன்றி கண்ணீர் வடிக்கிறார்.

காந்தி தேசம் கலவர பூமியாகலாமா என்கிறார்.

ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 69ஆவது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி,

“விஷத்தன்மை வாய்ந்த சாதியத்துக்கும் வேகமாகப் பரவக் கூடிய வகுப்புவாதத்துக்கும்
இந்தியாவில் இடமில்லை” என்றார்.

ஆனால் அவரது முழக்கம் 10 நாட்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை. 2002ல்
வகுப்புவாதத்தால் மானமிழந்த பட்டேல் பூமி, 2015ல் சாதீயால் மதிப்பிழக்கிறது.
மோடி அமித்ஷா பாடம் கற்கிறார்கள்.