Hot Posts

6/recent/ticker-posts

ஹஜ்செய்ய அனுமதி மருப்பு !

முறையான ஆவணங்கள் இல்லாத சுமார் 2 லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவில் நுழைய அனுமதி மறுப்பு!  அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, செப்.05 முறையான ஆவணங்களின்றி ஹஜ் செய்ய வந்த 188,747 ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாக மக்கா போலீஸார் தெரிவித்தனர். மேலும், முறையான அனுமதி ஆவணங்களின்றி உள்நுழைய முயன்ற 84,965 வாகனங்களுக்கும் மக்காவினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் 22 சட்டவிரோத ஹஜ் ஏற்பாட்டாளர்களும் பிடிபட்டுள்ளனர். சுமார் 3 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்கள் இந்த வருட புனிதக்கடமையை நிறைவேற்றுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் அமைதியாகவும், இலகுவாகவும், பாதுகாப்பாகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டே இத்தகைய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். மக்கமாநகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 9 முக்கிய சோதனைச்சாவடிகளுக்கு மேல் மக்கா நகருக்குள்ளும் 109 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, முறையான ஆவணங்களின்றி வருவோரை பிடித்து திருப்பியனுப்பி வருவதாகவும், முறையான அனுமதியின்றி நுழையும் சவுதி நாட்டவர்களும் பெருமளவில் இதில் அடங்குவர். Source: Gulf News / Sabq தமிழில்: நம்ம ஊரான்

நன்றி. அதிரை நியூஸ்