முஸ்லிம் லீக் வெற்றி
ஜார்கண்ட் மாநிலத்தில் வாழும் தலித், முஸ்லிம், பழங்குடி மக்களின் வாழ்வா தார நிலையை ஆய்வு செய்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் MP தலைமையிலான குழுவை அமைத்தார்.
இ.டி. முஹம்மது பஷீர் MP தலைமை யிலான குழுவினர் ஜார்கண்ட் மாநிலத் தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை வசதி, கல்வி, பொருளாதார நிலையில் பின்தங்கி வாழும் தலித், முஸ்லிம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு குடிக்க தண்ணீர், கல்வி கற்க கல்விச்சாலை, உடுத்த உடை, பசியாற உணவு பொருட்கள் என சமூக பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
முஸ்லிம் லீகின் சமூகபணிகளை கண்ட அரசு காவல்துறை மூலம் அடக்கு முறையை கையாண்டது. அடக்கு முறையை எதிர்கொண்டு சமூகப் பணிகளை தொடர்ந்து முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டது.
மேயர், துணை மேயர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர் களை அறிவித்து தேர்தல் களப்பணி யாற்றியது.
மாநகராட்சி
கிரிடி மாநகராட்சியில் 6 இடங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கைப் பற்றி உள்ளது.
4 வது வார்டில் முஸ்தபா மிர்ஷா
5 வது வார்டில் நூர் முஹம்மது
7 வது வார்டில் நாச்சியா பர்வின்
8வது வார்டில் உபைத்துல்லாஹ்
19வது வார்டில் நஜ்மா காத்தூன்
27வது வார்டில் சைபுல்லாஹ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மதுப்பூர் நகராட்சி
மதுப்பூர் நகராட்சியில் 2 இடங்களை முஸ்லிம் லீக் கைப்பற்றி உள்ளது.
14வது வார்டில் ரோஹிபர்வின்
20வது வார்டில் ஜனோபர் யாஸ்மின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ராம்கார் முனிசிபாலிடி
ராம்கார் நகராட்சியில்
10 வது வார்டில் இந்தர் தேவ் ராம் வெற்றி பெற்றுள்ளார்.
மேயர் மற்றும் துணை மேயர் பதவி களுக்கு போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் கணிசமான வாக்கு களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தனது வெற்றிக் கணக்கை துவக்கி உள்ளது தாய்ச் சபை
Social Plugin