நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்"" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்" இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!
எனவே இதுபோன்று அதிராம்பட்டினம் நடுத்தெரு தக்வா பள்ளியில் கடந்த பல ஆண்டு காலமாக ஸஹர் உணவு ஏற்ப்பாடு செய்து ஸஹர் உணவுக்காக அதிராம்பட்டினம் ECR ரோட்டில் தொடர் பயணத்தில் இருக்கும் பயணிகள் கடந்த பல வருடங்களாக அதிராம்பட்டினம் பகுதிகளில் பயணத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு ஸஹர் உணவு பல வருடங்களாக ஏற்ப்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிரது
இதுபோன்று அதிராம்பட்டினம் அனைத்து பள்ளிவாசல்களில் பணிபுரியும் மு அத்தின்,இமாம் போன்ற வர்களும், வெளியூர்களில் இருந்து வருகை தந்த ஹாபிஸ் போன்ற வர்களும் இந்த ஸஹர் உணவில் பங்கு பெற்று வருகின்றனர்
இந்த ஸஹர் உணவுக்காக யாரல்லாம் உதவி செய்து வருகின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அதிகமான செல்வத்தை கொடுத்து நோய் நொடி இல்லாமல் காப்பாற்று வனாக.
இதேபோன்று இஃப்தார் நேரங்களில் அதிராம்பட்டினம் தக்வாபள்ளியில் நோன்பாளிகலுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய இப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக பனி செய்ய உள்ளனர்
Social Plugin