Hot Posts

6/recent/ticker-posts

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட பொதுக்குழு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு !

தஞ்சாவூர், செப். 30
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தஞ்சை மாநகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை கவிதா மன்றத்தில் இன்று (செப். 29) சனிக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பி.எஸ் ஹமீது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம் ஜெய்னுல் ஆபிதீன், பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.கே ஹாஜா நஜ்முதீன், எஸ்.எஸ் நூர்தீன், மாவட்ட துணைச்செயலாளர் எம்.ஜெ அப்துல் ரவூப், மாநில கெளரவ ஆலோசகர் ஆர்.முகமது பாருக், மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் அதிரை ஏ.சாகுல் ஹமீது, அதிரை பேரூர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அரசு டவுன் காஜிT,சையத் காதர் உசேன்புகாரி கிராத் ஓதி துவக்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். கூட்டத்தில், தஞ்சை மாநகர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக ஜி.எஸ். ஜாஃபர், செயலாளராக அதிரை முகமது அபூபக்கர், மகளிர் அணி அமைப்பாளராக ஷாஹிரா பானு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், மண்டல மாநாடு நடத்துவது, மாவட்டத்தின் புதிய பகுதிகளில் பிரைமரி அமைப்பது, புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்பு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் நகர மகலிர் அணி அமைப்பாளர் கூருகையில்:

தஞ்சாவூர் பகுதி மட்டும் அல்ல, நமது மாவட்டத்திலேயே அதிகமான பெண்களை கட்ச்சிப்பனிக்கு  ஈடு படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்

அதன்படி  தஞ்சாவூர் நகர அனைத்து இஸ்லாமிய பெண்கள் மத்தியில்  வீட்டுக்கு வீடு சென்று முஸ்லிம்லீக்கின்  செயல்பாடுகளை பேச இருப்பதாகவும் காலை 8 மணி முதல் தினசரி நால் ஒன்றுக்கு 3 மணிநேரம் கட்சி பணிகளுக்கு ஒதுக்க இருப்பதாகவும் கூறினார் மேலும்

ஒரு கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தல் வெற்றிக்கும் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். எனவே, கட்சிப் பணிகளில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும். பெண்களை கட்சி உறுப்பினர்களாக்க வேண்டும். பெண்களுக்கும், பெண் உரிமைக்கும் முஸ்லிம்லீக்  திட்டங்களை இந்திய தேசி முஸ்லிம்லீக் தலைவர் அவர்கள்அதிக அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

மகளிர் அணி தவிர பொறியாளர், வர்த்தகர் அணி, மருத்துவர் அணி, சிறுபான்மையினர் அணி நிர்வாகிகளோடும் விரைவில் கலந்து பேச இருப்பதாகவும் கூரினார்

மாவட்ட தலைவர்,செயலாளர், பொருளாளர், மற்றும் அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, வல்லம்,செந்தலை பட்டினம் முஹம்மது பந்தர் போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லிம்லீக் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்