Hot Posts

6/recent/ticker-posts

பட்டுக்கோட்டையில் திமுக ஆலோசனை கூட்டம். வழக்கறிஞர் ஏ,முனாப் பேச்சு

கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் கனவை நினைவாக்க வேண்டும்

வழக்கறிஞர் முனாப் பேச்சு


பட்டுக்கோட்டை வி பி எஸ், திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை நடந்த  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது

இந்த கூட்டத்திற்கு திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் ,சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் எஸ்,எஸ், பழனிமாணிக்கம் தலமை வகித்தனர் மத்திய மண்டல பொருப்பாளர் மு,சண்முகம், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழக்கிய இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் முனாப் பேசியதாவது:~

தனது உயர்ந்த பண்பின் காரணமாக அமைந்த பெயராலேயே இறுதிவரை அழைக்கப்பட்ட தலைவர் ‘காயிதே மில்லத்’. முகமது இஸ்மாயில் என்பதுதான் அவரது இயற்பெயர். ஆனால், தன்னலமற்ற, தூய்மையான அரசியல் நடவடிக்கைகளால், ‘காயிதே மில்லத்’ என்றே அழைக்கப்பட்டார். உருது மொழியில், ‘வழிகாட்டும் தலைவர்’ என்று இதற்குப் பொருள்.

அதேபோன்று திமுக வும் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கும் காயிதே மில்லத் காட்டி தந்த பாதையின் பிரகார்ம் இன்றும் பயணத்து வருகின்றது   பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டி இடும் அண்ணன் கா,அண்ணாதுரை அவர்கள் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நன்கு படித்த வர்  ஆகவே நல்ல மனிதர் வரவேண்டும் அந்த மனிதர் தான் அண்ணாதுரை இவர்களின் வெற்றிக்கு இந்தியயூனியன் முஸ்லிம்லீக் துணை நிற்கும் என்று பேசினார்

இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சி பிரமுகர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்