தொழுகைக்கு வரும் ஒவ்வொரு மூமினும் அவசியம் வீட்டில் இருந்து வரும்போது முக கவசம் அவசியம் போட்டு வரவும்
கொரோனோ சம்மந்தமாக பல மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள், மிக பெரிய ஆபத்தை உணர்த்துவதாக உள்ளது. நாம் ஏதோ சாதாரணமாக இதை கடந்து செல்ல முடியாது. போன வருடம், இந்த கொரோனோ பற்றிய அறிவு நமக்கு இல்லாமல் இருந்த போது, நாம் காட்டிய அலட்சியம், நம்மில் நெருக்கமான பலரை இந்த நோய் காவு கொண்ட பின்பும் தொடர்வது அலட்சியம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது.
இதை கருத்தில்கொண்டு நமது பள்ளியில் ஒவ்வொரு வக்த் தொழுகைக்கு முன்பும் இமாம் அவர்கள் முக கவசம்,சமுக இடைவெளி சம்மந்தமான ஆலோசனை, ஆளிம் களின் வேண்டுகோள் ஆகியவற்றை எடுத்துரைத்து வருகின்றனர்
எனவே அரசாங்க விதிமுறைகளை சரியாக கடைபிடித்து முக கவசம்,சமூக இடைவெளி பின்பற்றி நடப்பதே நன்மை பயக்கும்.
இப்படிக்கு
அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளி நிர்வாகம்
Social Plugin