ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அரசு தற்காலிகமாக திறக்க அனுமதிக்குமானால்,
அதனை தமிழக அரசே கையகப்படுத்திக் கொண்டு நடத்த வேண்டும்.
மாறாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் புறவாசல் வழியாக ஆலையை திறப்பதற்கு தமிழக அரசு இடமளிக்கக்கூடாது.
நவாஸ்கனி எம்பி அறிக்கை
--
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
அப்படி தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அதனை உச்சநீதிமன்ற கருத்தின் படி அரசே கையகப்படுத்தி அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பலகட்ட மக்கள் போராட்டத்திற்கு பின்பு மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி எனும் போர்வையில் மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் முயலுமானால் அது கடும் கண்டனத்துக்குரியது.
அதற்கு தமிழக அரசு இடமளிக்க கூடாது.
தற்காலிகமாக திறப்பது என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியது போன்று ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டுமே அனுமதிக்க வேண்டும் வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக் கூடாது.
ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரி உள்ளிட்டோர் தலைமையில் ஸ்டெர்லைட் போராட்ட குழு மற்றும் சூழலியல் அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களை தமிழக அரசு சமரசமின்றி பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றர்
--
கே. நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்-இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
Social Plugin