12 ஆம் வகுப்பு முடித்த ஒரு முஸ்லிம் மாணவன்.....
அடுத்த 2 ஆண்டுகள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் கிராமங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சுற்றி திரிந்து பார்த்து அங்கே நோயாளிகளின் ஈனக்குரல்களையும், பொருளாதார இழப்பினால் ஏற்படும் சமூக அவலங்களையும் நேரில் கண்டு.....
இந்த கொடுமைகளுக்கு தீர்வு என்ன என்ற கோபமும், இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய வேட்கையும் அவனது மனதில் தீப்பொறியாக எழுகின்றபோது......
மருத்துவம் குறித்த இஸ்லாமிய சித்தாந்தத்தையும், இடைக்கால வரலாற்றில் முஸ்லிம் மருத்துவர்களின் சாதனைகளையும் அவனது ஆழ் மனதின் அடியில் ஆணி அடித்தாற்போல விதைக்க வேண்டும்.
அதோடு சேர்த்து உலகின் மருத்துவ வரலாறையும், இந்திய பாரம்பரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான புரிதலையும் ஏற்படுத்தி.......
நீட் தேர்வில் வெற்றிபெற வைத்து அடுத்த ஐந்தரை ஆண்டுகள் ஆங்கில மருத்துவம் படிக்க வைக்க வேண்டும்.
இரும்பை நெருப்பில் காய்ச்சி அடித்தால் எப்படி வடிவம் பெறுமோ அதுபோல....
பெற்றோர்களின் கடும் முயற்சியினால் அப்படி ஒருசில மாணவர்கள் இந்த உம்மத்தில் உருவாக்கப்பட்டால்
..............குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
இவர்களில் சிலர் இந்த நூற்றாண்டின் மாபெரும் உயிரியல் புரட்சியாளர்களாக உருவெடுப்பார்கள்.
அடுத்துவரும் நூற்றாண்டுகள் முழுக்க மருத்துவத் துறையின் முன்மாதிரியாக இவர்கள் கருதப்படுவார்கள்.
Social Plugin