இளைஞர்களின் வெளிநாட்டு படிப்பு, வேலைவாய்ப்பை பாழ்படுத்துவதா?
சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும்
இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன், தலைவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
திருச்சி, ஏப். 28 -
இளைஞர்களின் வெளிநாட்டு படிப்பு, வேலை வாய்ப்பை பாழ்படுத்துவதா? என்றும் சி.ஏ.ஏ. போராட்டக் காரர்கள் மீதான வழக்கு களை உடனே வாபஸ் பெறவேண்டுமென்றும் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முஸ்லிம் நல அமைப்புகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறுகையில், ‘‘சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள்மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி யளித்துள்ள நிலையிலும், இது தொடர்பாக எந்தவித அரசு ஆணையும் பிறப்பிக்கப் படவில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்தால் பல இளை ஞர்களின் வேலை வாய்ப்புகள் சிதைக்கப் படுகின்றன’’ என்று தெரிவித்தார்.
நாகப்பட்டினம் சட்டப் பேரவை வேட்பாளரும் விடுதலை சிறுத்தை கட்சிகள் துணைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் இதுகுறித்து கூறுகையில், ‘‘பொது ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, படிப் பிற்கான இளைஞர் களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்றைய 27.04.2021 தி நியூ. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த செய்தி வருமாறு :
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக (சிஏஏ) போராடியவர்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள்மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில் ஏற்படும் காலதாம தத்தால் வெளிநாடுகளில் படிக்க விரும்பும், வேலை வாய்ப்பு பெற விரும்பும் இவர்களின் கனவு தவிடுபொடி யாகியுள்ளது.
இந்த சோதனையான காலகட்டத்தில் போராட் டக்காரர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதற்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு மற்றும் விமர் சனங்களுக்கு மத்தியிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத் தின்படி பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்து, புத்தக, சீக்கிய, கிறிஸ்தவ, ஜெயின் மற்றும் பார்சிய சமூகத்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இவர்கள் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவிற்கு வந்திருக்க வேண்டும். இந்த 6 சமூகத்தவர்களில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததால் இந்தச் சட்டம் பாரபட்சமானது என்றும்,, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் உச்சநீதி மன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலிலும் இதனைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் வழக்குத் தொடர்ந்து இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த பாரபட்சம் காட் டும் குடியுரிமை திருத் தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட் டங்களும், பேரணி களும் நடை பெற்றன. போராட்டகாரர்களுக்கு
எகுராக தமிழ்நாட்டில் 1500 வழக்குகள் பதிவு செய்யப் பட்´ள்ளன.
இந்நிலையில் ஓராண் டிற்கு பிறகு வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறந்த முன்னுதாரணம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முஹம்மது தாவூத் நைனார் மரைக்காயர் ஆவார். இவர் பாஸ்போட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தபோது 2020 ஆம் ஆண்டில் சி.ஏ.ஏ.வுக்கு எகுரான போராட்டத்தில் அவருக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டதை காரணம் காட்டி அவரது புதுப்பிக்கும் மனு நிராகரிக் கப்பட்டது. இதன் காரணமாக வெளிநாட் டில் இவருக்குக் கிடைத்த வேலை வாய்ப்பு பறிபோய் விட்டது.
சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் சி.ஏ.ஏ. போராட்டக்காரர்களுக்க எதிரான வழக்குகள் அனைத்தையும் (பொது சொத்தை சேதப்படுத்துதல் மற்சிம் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகியவற்றிற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு கள் நீங்கலாக) வாபஸ் பெற் றுள்ளதாக தெரிவித் திருந்தார்.
ஆனால், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற முஸ்லிம் நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறுகையில், ‘‘சி.ஏ.ஏ. போராட்டக்காரர்கள்மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ள நிலையிலும், இது தொடர்பாக எந்தவித அரசு ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்தால் பல இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் சிதைக்கப் படுகின் றன’’ என்று தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப அணி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
#IUML #iuml_itwing
Social Plugin