Hot Posts

6/recent/ticker-posts

இன்ஸா அல்லாஹ் கருத்து கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிகமான இடங்களை பிடிக்கும். இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நம்பிக்கை

தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை விட திமுக கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி பேட்டியளித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவைப்படும் ஆக்சிஜன் குறித்து மருத்துவ அதிகாரி நாகநாதன் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்து, தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் கொரானா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதி உள்ளிட்டவை இன்றி சிரமப்படுகின்றனர். இதனை தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தட்டுப்பாடின்றி படுக்கை, வசதி ஆக்சிஜன் தேவை உள்ளதா என பரமக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தேன். சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் செய்து தரப்படும்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “திராவிட முன்னேற்றக் கழகம் அதிகளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை விட திராவிட முன்னேற்ற கழகம் அதிக தொகுதிகளில் வெற்றிபெறும்” எனக் கூறினார்.