நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் முனைவர் கோவி செழியன் அவர்கள். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களால் தமிழக அரசின் தலைமை கொறடாவாக தேர்வு செய்யப்பட்டார்.
கோவி செழியன் அவர்களின் வெற்றிக்கு மதச்சார்பற்ற சக்திகளோடு தாய்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், இஸ்லாமிய சமுதாயமும் மிகப்பெரும் பங்களிப்பை செய்தது.
அதற்கு நன்றி கூறும் வகையில் முனைவர் கோவி செழியன் அவர்கள் இன்று (17-05-2021) மாலை எமது இல்லத்திற்கு வருகை தந்து நன்றி தெரிவித்தார்கள். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
தி.மு.க திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஆவணியாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நசீர் முகம்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது உசேன், ரைசுல் இஸ்லாம், முகம்மது ஹாலிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-ஆடுதுறை ஷாஜஹான்
மாநில செயலாளர்
Social Plugin