Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் பகுதி மக்களின் வாழ்த்துக்கள் பெற்ற முதல்வர்: ஸ்டாலின் வாழ்க,ஸ்டாலின் பஸ் வாழ்க என்ற முனு முனுத்த பேச்சு.

அதிராம்பட்டினம் பகுதியில் தமிழக அரசு அறிவித்த கொரோனா உதவி தொகை சிரமம் இன்றி வாங்கி சென்ற பொதுமக்கள்

அதிராம்பட்டினம் மே,15

தமிழகம் முழுவதும் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையான ரூ.2,000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மே 10ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தனர் . அதன்படி, நிவாரண நிதி வழங்கும் திட்டம் 10 ஆம் தேதி முதல் தொடந்து நடைபெற்று வருகிறது.

அதிராம்பட்டினத்தில்  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டது அதன்படி. குடும்ப அட்டையில் பெயர் இருக்கும் யார் ஒருவரும் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் அரசு வெளியிட்டது அதன்படி ரேசன் அட்டை தாரர்கள் சிரமம் இன்றி இரண்டாயிரம் பெற்று வருகின்றனர்

தமிழக மக்ளுக்கு நிவாரண நிதியாக ரூ.4,000-ல் முதல் தவணை ரூ.2,000-ஐ வழங்கும் திட்டத்தின்படி, ரேஷன் கடைகளில் தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் மக்களுக்கு இரண்டாயிரம் வழங்ப்பட்டு வருவதை பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்று செல்கின்றனர்

நிவாரணம் தொகையை பெற வருகைதரும் மக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் முககவசம் சமூக இடைவெளி ஆகிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகின்றனர்

அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள பொதுமக்கள் நிவாரணம் தொகை இரண்டாயிரம் பெற்றுக்கொண்டு முதல்வர் வாழ்க,தளபதி வாழ்க, ஸ்டாலின் பஸ் வாழ்க என்ற முனுமுனுத்த குரலுடன் சென்றது காண்போரை மெய் சிலிர்க வைத்தது

 கொரோனா உதவி தொகை முதலில் இரண்டாயிரம் தளபதி ஸ்டாலின் அறிவித்ததை அதிரை நகர திமுக செயலாளர் இராம குணசேகரன் மற்றும் துணை செயலாளர் அன்சர்கான் ஆகியோர் தளபதி முக,ஸ்டாலின் அவர்களக்கு நன்றி தெரிவித்தனர்