Hot Posts

6/recent/ticker-posts

தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகைகளின் வரிசையில் இன்னொரு வைரத்தை இழந்துவிட்டோம். மனம் வலிக்கிறது. நல்ல வழிகாட்டுதல் தரும் மார்க்க கலங்கரை விளக்குகள் அணைவதைப் பார்க்க பொறுக்கவில்லையே! முஸ்லிம்லீக் முதன்மை துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான் இரங்கல்

தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகைகளின் வரிசையில் இன்னொரு வைரத்தை இழந்துவிட்டோம் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் முதன்மை துணைத்தலைவர் இரங்கள்

மௌலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்கள் நேற்று (19/05/2021) மாலை பள்ளப்பட்டியில் அன்னாரின் இல்லத்தில் நம்மைவிட்டும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.  

பள்ளப்பட்டி உஸ்வத்துல் ஹஸனா அரபிக் கல்லூரி முதல்வர், கரூர் மாவட்ட அரசு தலைமை காஜி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கௌரவத் தலைவர் என குறிப்புரை தரப்பட்டாலும் 'நம்முடைய இன்னொரு மூத்த ஆலிம் பெருந்தகையை இழந்துவிட்டோம்' என்றுதான் மனம் அழுகிறது. எல்லோரிடத்திலும் நல்ல இணக்கத்தோடு பழகுவதும், குறிப்பாக சகோதர சமுதாய மக்களோடு சகோதரத்துவ வாஞ்சையுடன் அவர்களை அரவணைத்துப் பேசுவதும் அவர்களின் தயாள பண்பு. ஷரீஅத் கோர்ட் தீர்ப்பாக அவர்கள் வழங்கிய பல மார்க்கத் தீர்ப்புகள் ஏற்றமிக்கவை. பல குடும்பப்  பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகள் கண்ட சட்டமேதை. பற்பல மார்க்க அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக் கழகம்; தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்களோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த பற்றாளர். 

நம்மிடையே உள்ள மூத்த உலமாக்கள் பலபேர் மிகக் குறுகிய நாட்களில் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.  மனம் வலிக்கிறது. நல்ல வழிகாட்டுதல் தரும் மார்க்க கலங்கரை விளக்குகள் அணைவதைப் பார்க்க பொறுக்கவில்லையே!   இறைவா!
உன் கருணையை வேண்டி நிற்கிறோம். எஞ்சியுள்ள எங்களின் மார்க்க அறிஞர்களின் ஆயுளை நீட்டித்துக் கொடுப்பாயாக! இத்தகைய இழப்புகளைத் தாங்கிடும் மனவலிமை எங்களுக்கு இல்லையே! இந்த கொடுமையான பெருந்தொற்றிலிருந்து  எல்லோருக்கும் விடுதலை தா இறைவா! 

மறைந்த பெருமரியாதைக்குரிய ஹஜ்ரத் அவர்களுக்கு உனது உயரிய தரஜா அனைத்தையும் வாரி வழங்கிடுவாயாக! ஆமீன். 

கனத்த இதயத்தோடு .... 

எம். அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்