Hot Posts

6/recent/ticker-posts

ஏற்றம் தந்திடும் ஏணி நல்ல மாற்றம் தந்திடும்........

இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.

இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லா கான் ‘அகில இந்திய முஸ்லிம் லீக்கை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி ஜின்னா அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் காயிதே மில்லத் இதன் தலைவரானார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டதால் அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த ‘அகில’ என்பதை நீக்கிவிட்டு 1949-ம் வருடம் மார்ச் மாதம் இதே நாளில் ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்து.

காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவராக இப்ராகிம் சுலைமான் சேட், பனாத்வாலா ஆகியோர் பணியாற்றினர்.  அதேபன்று மத்திய இரயில்வே துறை இணை அமைச்சராகவும்  ஈ.அகமது  பணியாற்றினார்

தமிழகத்தில் சந்தன தமிழ் வித்தகர் AKA, அப்துல்சமது, பன்மொழி புலவர் அப்துல் லத்தீப் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர் . தற்போது  பேராசிரியர் கே,எம், காதர் மொஹிதீன் அவர்கள்  இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தேசிய தமிழக தலைவராக இருந்து தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்

 நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வியுற்றுள்ளோம் ஆனால் நம் கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தளபதி முதல்வராகி இருக்கிறார் அதற்கான முஸ்லிம்லீக் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

ஒரு கூட்டணி கட்சி அதுவும் தனி சின்னத்தில் நின்று பல்வேறு அரசியல் சூழலுக்கு மத்தியில் வெற்றி பெறுவது என்பது சாதாரன விசயம் அல்ல என்ற எதார்த்த உண்மையை உணர்ந்தவர்களாகவே 1962 முதல் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் பயணித்து வருகிறோம் அந்த வகையில் நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூன்று இடங்களில் போட்டியிட்டு மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை மனவேதனையையும் தந்தது தோல்விக்கான காரணத்தை நாம் ஆராயும் போது சிலர் சின்னம் என்று சப்பை காரணங்களை சொல்பவர்கள் சென்ற முறை முஸ்லிம் லீக் எந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது என்பதையும் ஆராய வேண்டும்

 கடந்த பாராளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம்  தொகுதியில்  பி ஜே பி  வேட்பாளரை  இந்த ஏணி சின்னம் தான் தோற்கடித்தது   எதார்த்தஉன்மை என்னஎன்பது களத்திள் நின்ற, அதற்காகபாடுபட்ட சகோதரர்களுக்கு மட்டும் நன்குதெரியும் அதை உரிய இடத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் 

நமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவோம்
 
அதிரை ஊடகவியலாளர்