வரலாற்று சிறப்புமிகு வெற்றி பெற்று திராவிட இயக்க வெற்றிப்பாதையில் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கும் தளபதியார் முக,ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில துணைத் தலைவர், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
கே. நவாஸ்கனி் தெரிவித்தனர்
தமிழ் மண்ணின் தன்மானத்தையும், சுயமரியாதையும் காக்கும் வகையில் அடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரலாற்று சிறப்புமிகு வெற்றி பெற்று திராவிட இயக்க வெற்றிப்பாதையில் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கிறார் தளபதியார் அவர்கள்.
சிறப்புமிகு வெற்றியை தந்த தமிழக மக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் பெற்றிருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் வெற்றி பெற்ற அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
அதேநேரத்தில் வாய்ப்பை தவறவிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வேட்பாளர்களும் தளர்ந்து விட வேண்டாம்.
நாம் போராடியது மாபெரும் பணபலமும், அதிகார பலமும் மிக்க ஆதிக்கவாதிகளோடு என்பதை மறந்து விட வேண்டாம்.
களத்தில் போராடிய அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
நமக்கான சேவை களம் கண் முன் நிற்கிறது.
தொடர்ந்து மக்கள் பணியாற்ற, புது புத்துணர்ச்சியோடு தளபதியார் தலைமையில் தமிழகத்தை தலையுயரச் செய்ய பாடுபடுவோம்.
ஆதிக்க வாதிகளுக்கும், அடிமை கூட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தன்மானத்தையும், சுயமரியாதையையும் பாதுகாக்கும் வகையில் வெற்றி வாகை சூடிய தளபதியுர் அவர்களுக்கும், அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்ளை தெரிவித்தனர்
Social Plugin