மத பாகுபாடு இல்லாத ஒரு பொது நோக்கு போன்றவற்றில் எல்லோருக்கும் முன் உதராணமாக திகழ்பவர் திரு மு.க. ஸ்டாலின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தியில் கூறியதாவது : தமிழகத்தில் கலைஞர் நடத்திய நல்லாட்சிக்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு தொடர்வதற்கான வாய்ப்பை தமிழக மக்கள் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.
தமிழக மக்களை சரியாக தெரிந்தவர்! அவர்களின் உள்ள உணர்வுகளை தெரிந்தவர். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை யூகித்து, அதற்குரிய பரிகாரத்தை தேடி தருவதில் அவர்க்குள்ள நிர்வாக திறமையையும் அனுபவும் நிச்சியமாக நல்வழி காட்டும்.
தமிழகத்தின் வரலாறு சுய ஆட்சி கோட்பாடு, அறிவியல் கண்ணோட்டம், மத பாகுபாடு இல்லாத ஒரு பொது நோக்கு போன்றவற்றில் எல்லோருக்கும் முன் உதராணமாக திகழ்பவர் திரு மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டில் நாடும் ஏடும் போற்றுப்படியான நல்லாட்சியை நிச்சயமாக தருவார் என்று எல்லோரும் நம்புகிறோம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
Social Plugin