'உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்' என வலியுறுத்துகிறார் திருச்சி, ராக்போர்ட் நரம்பியல் மையத்தின் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அ. வேணி.
இதுகுறித்து மேலும் அவர் கூறியது;
நாம் வாழும் இந்த பூமியானது சூரியனை சுற்றுவதோடு மட்டுமல்லாமல் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் நமக்கு பகலையும் இரவையும் தருகிறது எதற்காக?
மரங்கள் இலையுதிர் காலத்தில் தன் இலைகளை விடுத்து வசந்த காலத்தில் பூ பூத்து, காய் காய்த்து இயைற்கையோடு இயைந்து வாழ்கின்றது. அனைத்து பறவைகளும் சூரியன் மறையும் போது தன் உறைவிடம் சென்று உறங்கி விடியற்காலை வேலைகளை தொடங்குகின்றன. இப்படி இயற்கையின் விதிகளை மனிதர்களைத் தவிர அனைத்து ஜீவராசிகளும் பின்பற்றுகின்றன.
ஆறு அறிவு கொண்ட மானிட வர்க்கம் தனது விஞ்ஞான வளர்ச்சியால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி விட்டது. எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் சில இருக்கத்தான் செய்கினறன. இப்படி மாற்றி விட்டதால் நஷ்டம் நமக்கு தான்.
தூக்கம் நமக்கு அளிக்கப்பட்ட வரபிரசாதம். தூக்கத்தை குறைத்து (5 மணி நேரங்களுக்கு குறைவாக) நாம் செய்யும் எந்த வேலையும் நம் ஆயுட்காலத்தை குறைக்கவே செய்கின்றன. இதை நம்மில் எத்தனைப் பேர் உணர்ந்திருக்கிறோம்.
தூக்கம் நமக்கு எப்படி வருகிறது? தூக்கத்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? நன்றாக தூங்காததால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? என்பதை உணர்ந்தால் தான் வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களை செய்து நல்ல அளவான தூக்கம் கொண்டு நாம் வாழும் நாட்களில் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் அதிகப் படுத்த முடியும்.
தூக்கம் நமக்கு எப்படி வருகிறது?
உடலில் ஒவ்வொரு அணுவையும் இயக்குவது மூளைதான். நாம் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது மற்றும் உடலின் ஒவ்வொரு உணர்ச்சியும் மூளையை சென்றடைகிறது. நம் கண்களில் ரெட்டினா என்னும் ஒரு படலம் உள்ளது. கண்களில் பாயும் ஒளி அலையானது இப்படலத்தில் விழுந்து நரம்பு வழியாக முளையை சென்றடைகிறது. நமது கண்களுக்கு இருட்டி விட்டது என்பதை ரெட்டினா உணர்ந்த உடன் மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் என்னும் பகுதிக்கு சமிஞைகளை அனுப்புகிறது. அங்கிருந்து பினியல் சுரப்பிக்கு மெலட்டோனின் என்ற நொதியை சுரப்பதற்க்கு கட்டளை இடப்படுகிறது. மெலடோனின் தான் நாம் தூங்குவதற்கான நொதியாகும். மெலடோனின் அளவு அதிகரிக்கும் போது நமக்கு நல்ல தூக்கம் வருகிறது. இப்படி தான் நாம் தினமும் உறங்கிறோம் இதில் ஒரு உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். அதாவது இருட்டை ரெட்டினா உணர்ந்தால் தான் நமக்கு உறக்கம் வரும். இரவு நேரங்களில் தொலைக்காட்சிää அலைப்பேசி, கணினி, மற்றும் மடிக்கணினி போன்றவற்றிலிருந்து வரும் வெளிச்சமானது அதிகமாக இருப்பதால் நமக்கு இவற்றை பயன்படுத்தி விட்டு படுக்கும் போது தூக்கம் உடனே வருவதில்லை.
சராசரியாக நமக்கு படுத்து 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்து விடும் அதிக வெளிச்சத்தை பார்த்துவிட்டு படுக்கும் போது தூக்கம் வருவதற்க்கு 1 மணி நேரத்திற்க்கும் மேலாகிறது. இன்னும் சிலர் தூக்கம் வரவில்லையே என தொலைக்காட்சி மற்றும் கைப்பேசியில் மூழ்கிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் தூங்கச் செல்லும் நேரம் இரவு 12 மணிக்கு மேலாகிறது. நமது உடல் சரியாக பகல் நேரத்தில் இயங்குவதற்கு நமது மூனையானது இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை கண்டிப்பாக ஓய்வில் இருக்க வேண்டும் இந்த நேரத்தில் தான் நமது மூளையின் பிட்யூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியிலிருந்து பல்வேறு நொதிகள் சுரந்து நம் உடலில் உள்ள உறுப்புகள் செவ்வனே அதன் பணியை செய்வதற்கு இந்த சுரப்பு பொருட்கள் உதவுகின்றன. நாம் இந்த நேரத்தில் கண் விழித்திருப்பதால் மூளைக்கு ஓய்வு கிடைப்பதில்லை. எனவே பகலில் உடல் சுறுசுறுப்பாக இருப்பதில்லை.
கனவு…
தூக்கத்தில் சில பேருக்கு கனவுகள் நிறைய வருகிறது என்பர், சில பேர் கனவு எனக்கு வாழ்நாளில் வந்ததே இல்லை என்பர் இவை இரண்டுமே வியாதி அல்ல, அதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. நாம் உறங்கும் போது REM மற்றும் Non REM உறக்க நிலை என்று இரண்டு நிலை உள்ளது. இரண்டு நிலைகளும் 6 முதல் 8 முறை 7 மணி நேர உறக்கத்தில் வருகின்றது. சுநுஆ நிலையில் வரும் கனவுகள் நம் வாழ்க்கையில் உண்மையாக நடப்பதை போன்று உணர்கிறோம், இந்த கனவானது நமக்கு விழித்தவுடன் நினைவுக்கு வருகிறது. ழேn சுநுஆ நிலையில் வரும் கனவுகள் நம் நினைவுக்கு வருவதில்லை.
சிலருக்கு தூங்க ஆரம்பிக்கும் போது உடலின் ஒரு பகுதியோ அல்லது உடல் முழுவதுமோ தூக்கி போடும்ää இதனால் நிறைய பேர் வலிப்பு வியாதி வந்து விட்டதோää நரம்பு தளர்ச்சி வந்து விட்டதோ என்று பயப்படுகிறார்கள். இது நம் உடலில் ஏற்படும் இயல்பான ஒன்று. இப்படி தூக்கி போட்ட சிறிது நேரத்தில் நல்ல உறக்கம் வந்து விடும். இதை நினைத்து யாரும் பயம் கொள்ள தேவையில்லை.
தூக்கத்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
1. உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது
2. ஞாபக சக்தி நன்கு வலுப்பெருகிறது
3. நாளமில்லா சுரப்பிகள் நன்கு செயல்படுகிறது
4. இனப்பெருக்க உறுப்புகள் நன்கு வேலை செய்கிறது
5. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
6. மூளையில் உள்ள நச்சுப் பொருட்கள் க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் மூலம் வெளியேற்றப் படுகிறது.
க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் (Glymphtic system) என்றால் என்ன?
உறக்கத்தின் போது மட்டுமே செயல்படும் க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் (Glymphtic system) என்னும் நச்சுப்பொருட்களை மூளையில் இருந்து வெளியேற்றும் முறை புதிதாக மனித மூளையில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.
நான் மருத்துவம் சேர்ந்த பொழுது நமது உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் மற்றும் நாளங்கள் நச்சுப் பொருட்களை உடலில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் உரிந்து எடுத்து நமது உடலைச் சுத்தப்படுத்துகின்றன. இந்த நிணநீர் சுரப்பியானது மூளையில் இல்லை என்று படித்தேன்.
ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு மூளையில் சற்றே வேறுபட்ட வடிவில் நிணநீர் நாளங்கள் உள்ளது என்றும் அதை க்ளிம்ஃபாடிக் சிஸ்டம் (Glymphtic system) என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இந்த முறை (System) இரவில் நாம் தூங்கும் போது மட்டுமே செயல்படும் என்றும் மைக்கென் (Miken) என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். இது செய்யும் வேலைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நமது மூளை பகல் முழுவதும் வேலை செய்யும் போது பல்வேறு புரதப்பொருட்களையும் மற்றும் மூளையில் சேரும் தேவையற்ற கொழுப்பையும் இது அகற்றுகிறது.
இதில் முக்கியமானது பீட்டா அமைலாய்டு (β Amyloid) என்ற பெப்டைடு, இது அதிக அளவில் மூளையில் படிவதால் வரும் நோயே அல்ஸைமர்ஸ் (Alzheimer’s) என்ற ஞாபக மறதி வியாதி. உடலின் அசைவுகளை குறைத்து மனிதனை சிலையைப் போல் மாற்றும் பார்கின்ஸன்’ஸ் (Parkinson’s Disease) என்ற வியாதியும் சில பெப்டைடுகள் மூளையில் படிவதால் வருவது தான். இப்படி பல நச்சுப் பொருட்களை மூளையில் இருந்து அகற்றி கழுத்தில் உள்ள நிணநீர் சுரப்பியில் கொண்டு சேர்க்கிறது.
எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்?
இப்படி பல வித நன்மைகளைத் தரும் உறக்கம் அளவோடும் இருக்க வேண்டும. சராசரியாக தூக்கத்தின் அளவு வயதுக்கேற்றார் போல் மாறுபடுகிறது. பிறந்த குழந்தை 20 மணிநேரமும், பள்ளி செல்லும் குழந்தைகள் 9 மணிநேரமும், 20 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணிநேரமும், வயதானவர்கள் 5 முதல் 6 மணிநேரமும் உறங்கினால் போதுமானது. குறைவான உறக்கம் எவ்வாறு தீமையை ஏற்படுத்துகிறதோ அதேபோல் அதிக உறக்கமும் தீமையையே ஏற்படுத்தும். பகல் தூக்கம் மற்றும் இரவு தூக்கம் இரண்டும் சமமானது அல்ல, இரவு தூக்கமே நமது மூளைக்குச் சிறந்தது.
தூக்கமின்மையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
முறையாக தூக்கம் இல்லையென்றால் பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன அவற்றில் முக்கியமானது பக்கவாத நோய், மாரடைப்பு நோய், உடல் பருமன் நோய், மன அழுத்த நோய், மனப்பதற்ற நோய், உடல் வலி மற்றும் சாலை விபத்துக்கள் அதனால் ஏற்படும் எலும்பு முறிவு, மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் உயிர் இழப்பு ஆகியவைகளாகும். இப்படி உடலுக்கு ஏற்படும் நோய்களை தவிர வேலையிலும் வேலைசெய்வதிலும் திறன் குறையும், எந்ந வேலையையும் சரிவர செய்ய இயலாது. திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தலின் திறன் ஆகியவையும் குறைகின்றன. இதனால் ஒரு நபரின் உடல் பலம் குறைவதோடு மட்டுமல்லாமல் உள்ளத்தின் அமைதியும் மற்றும் தன்னம்பிக்கையும் குறைகிறது.
பெண்கள் இரவில் 11 மணி முதல் காலை 4 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். அப்படி உறங்க வில்லையென்றால் நாளமில்லா சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பி கருமுட்டைப் பைக்கும் கருப்பைக்கும் மற்றும் தைராய்டு சுரப்பிக்கும் சரியான சமிஞைகளை அனுப்புவது இல்லை. அதனால் மாத விடாய் சுழற்சியில் குறைபாடு ஏற்படுகிறது மற்றும் மலட்டுத்தன்மையும் ஏற்படுவதற்காண வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இரவு உறக்கம் நமது நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும். சுரியான உறக்கம் இல்லாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு கிருமிகளின் தாக்கங்கள் அதிகரித்து சதாரண சரி முதல் மூளைக்காய்ச்சல் வரை பல்வேறு தொற்று நோய்களால் அவதியுறும் அபாயங்கள் ஏற்படலாம்.
சிலர் இரவில் சரியாக உறங்காமல் பகலில் அதிக நேரம் உறங்குகிறார்கள். பகல் உறக்கமானது இரவு உறக்கத்திற்கு சமமானது அல்ல. பகலில் அதிக நேரம் உறங்குவதால் உடல் பருமன் அதிகரிக்கும் இதனாலும் பல்வேறு வியாதிகள் வருகின்றன.
நோய் வந்தவுடன் மருத்துவமணைக்கு நடையாய் நடப்பதை தவிர்க்க அளவோடு உறங்கி இயற்கையோடு இயைந்து இயல்பான வாழ்க்கை வாழ்ந்தோம் என்றால் 100 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
எனவே வாசகர்களே பணம், பதவி, புகழ் பின் ஓடாமல் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சூரியன் மறைந்ததும் நமது வேலைகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு 10 மணிக்குள் உறங்கச் சென்றோம் என்றால் நமது மூளை நம்மை வியாதி வராமல் பாதுகாத்துக் கொள்ளும். இரவில் விழித்தால் நோயில் படுப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறப்பு நேர்காணல்:
அதிரை நியூஸ்க்காக ஏ.சாகுல்ஹமீது
ஊடகவியலாளர்:
Social Plugin