Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் பகுதிகளில் அதிக மணிநேரம் மின்சாரம் தடை.கடந்த ஆட்சியில் போடப்பட்ட சோலார் விளக்குகள் மட்டுமே எரிந்தது


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பல மணிநேரம் மின்சார தடையால் கடந்த ஆட்சியில் போடப்பட்ட சோலார் விளக்குகள் மட்டும் வீதியில் எரிந்தது 

மதுக்கூர் பகுதியில்  மட்டும் மின்சாரம் எந்தவித தடங்களும் இல்லாமல் சீராக  அப் பகுதிக்கு கிடைத்து வருகின்றது அதிராம்பட்டினம் பகுதியில் மட்டும் மதுக்கூரில் இருந்து வரும் மின்சாரம் 10/6/2021 வியாழன் அன்று மதியம் முதல் மின்சாரம்  பல மனி நேரம் தடை பட்டது

அதிகமான மனி நேரத்துக்கு  தொடர்ந்து மின்சாரம் இப்பகதியில்  தடை ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகின்றது  இந்த மின்சாரம் தடை கடந்த ஒருமாதமாகவே இருப்பதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது   

இந்த மின்சாரம் தடை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள மின்சார வாரியத்திற்கு போன் செய்தாலும் போனை எடுக்கக்கூடிய நபர்களும் இல்லை உதவி மின் பொறியாளர் அவர்களுக்கு போன் செய்து கேட்டால் வழககமாக சொல்லும் செய்தியாக மின்சாரம் வரும் வழியில் மரம் விழுந்ததாகவே  கூறுகின்றனர்

தொடர்ந்து பல மணிநேரம் மின்சாரம் தடையால் அதிராம்பட்டினம் பகுதிக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட வாய்ப்புண்டு என்று சாமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது

 மதியம் தடைபட்ட மின்சாரம் இரவு 9 மணிக்கு  கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்