Hot Posts

6/recent/ticker-posts

அதிகமான இரத்த தானம் அரசு மதுத்துவ மனைகளில் செய்த ஊடகவியலாளர் பாரட்ட வேண்டும்


 உடலில்  உள்ள முக்கிய திரவம் ரத்தம் . ஒரு செடி உயிர் வாழ்வதறகுதி  தண்ணீர் அடிப்படை தேவையாகும்  அதேபோல் உடல் உறுப்புக்கள் சீராக செயல்பட வேண்டுமானால் ரத்தம் அவசியம்,முக்கியம்  இந்த ரத்தம் கொடையாக அளிக்கும் போது ரத்தம் கொடுத்தவரும் ,பெற்றவரும்  நன்மை அடைகின்றனர்

 இதுபோன்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த    ஏ,சாகுல்ஹமீது கடந்த 2005 ம் ஆண்டு முதல் 48தடவை இரத்ததானம் செய்து உள்ளார்

49வது வயதில் 48 வது தடவை இரத்த தானம் செய்த இவர்  வரும் 14/6/2021 உலக ரத்த தான தினம் அன்று இரத்த தான விழிப்புணர்வு பற்றிய தகவல்களை சமூக இணையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு பகிர உள்ளார்  

கடந்த காலங்களில் அரசயல் பிரமுகர்கள் முதல் ஆன்மீக தலைவர்கள் வரை இவரின் இரத்த தானத்திற்க்கு சான்றிதழ் வழங்கி உள்ளனர்  கடந்த  ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் டாக்டர்,ராதாகிருஷ்ணன் (IAS) மற்றும் டாக்டர் சுப்பையன், திரு,கா,அண்ணாத்துரை போன்றவர்கள் இவருக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு செய்து அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு தேவையான இரத்த வகைகளை ஏற்பாடு செய்து கொடுத்து உதவி செய்து வருபவர்

ஏ,பி,ஒ போன்ற  ரத்த வகைகளை கண்டுபிடித்த தற்காக நோபல் பரிசு பெற்ற  விஞ்ஞானி  கார்ல் லேண்ட்ஸ்டெய்ணின் பிறந்த நாலைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14 ம் தேதி சர்வதேச ரத்த தான தினம் கடைபிடிக்கப்படும்
இந்த நிலையில்  இந்த ஆண்டு கொரொன நோய் தொற்று அதிகரித்து  பல இன்னல்களை சந்தித்த பொதுமக்களின் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு அதிகரித்தே காணப்படுகிறது

கொரொன நோய் தொற்று  தீவிரமடைந்து வரும் இக்காலத்திலும் ரத்த தானம் பற்றிய அதிகமான விழிப்புணர்வு செய்துவரும் இவரை அரசு  வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தில் இரத்ததானம் சாதனையாளர் விருது வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றார்