Hot Posts

6/recent/ticker-posts

உன்னத மர்ஹூம் அருட்கவிமேல்உன்னருள் மழையைப் பொழிந்திடுவாய். ஆலிம் கவிஞர் : தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி.



  அன்னைத்   தமிழின்     இலக்கியத்தில்
        அழியாப் புகழிடம்  பெற்றிட்ட
            உன்னத அதிரை அருட்கவியே
      உயர்ந்த பண்பின் ஒளிச்சுடரே
 ஆதம் காவியம் 
எனத் தொடங்கி 
   அகிலம் போற்றும் 
       நபி பெருமான் 
  நாதர் காவியம்    வரைத்தந்த 
       நல்லமு  தத்தேன்
  கவிச்சுடரே
 இறைநே  சர்களின்
  புகழ் பாடும் 
        இன்னரும் கவிதை நன்னூல்கள்
 நிறைவாய்த் தந்த தங்களுயர்
  நினைவை நாங்கள் மறவோமா
இன்பத்  தமிழென் மொழியாகும் 
  இஸ்லாம் என்னிரு விழியாகும் 
 என்னும் இலக்கில் பயணித்த
 இலக்கியச்  சுடர்  நுமை
                       மறவோமா
கண்ணியர்  காயிதே      மில்லத்தை
              கனிந்த சிராஜீல்
 மில்லத்தை
கன்னல் பிள்ளைத்
    தமிழ் வடிவில்
               காட்டிய  அதிரை    அருட்கவியே
  ஆஹா ! என்றே தழிழுணந்தோர்
            அகமுவந் தேத்தும்
  கவி மணியே 
தாஹா எனும் பெயர் 
        பெற்றநும்பால்
தகைநபி  ஆசி  பொழிந்திடுக 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  இஸ்லா  மியஇலக் 
       கியக் கழகம்
சிந்தையில் நும்மை 
பதித்த வண்ணம்
சீராய் நுமக்காய்      இறைஞ்சிடுமே !
மண்ணும் விண்ணும்       படைத்தாளும்
 மாபெரி   யோனே!
 யா அல்லாஹ்!
உன்னத   மர்ஹூம்   அருட்கவிமேல்
உன்னருள்   மழையைப்
பொழிந்திடுவாய் !!
     
    என்று இறைஞ்சும் ;

  ஆலிம்   கவிஞர்  : தேங்கை
 ஷறபுத்தின் மிஸ்பாஹி.