Hot Posts

6/recent/ticker-posts

25.06.1949 இல் காதிர் முகைதீன் நடுநிலைப்பள்ளியை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் அவர்கள் தொடங்கி வைத்த இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் கல்விக்காக குரல் எழுப்பிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் படம் இல்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா,அண்ணாதுரை கலந்துகொண்டு புதிய பாதையை திறந்து வைத்தார்.

அதிராம்பட்டினம் ஆக21
அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா 21/8/2022 அன்று காலை எம்,கே,என்,  மதரசா டிரஸ்ட் செயலாளர் எஸ்,மீராசாகிப் தலமையில் நடைபெற்றது

விழாவிற்கு  பள்ளி ஆட்சி மன்றக் குழு தலைவர் அப்துல் ஹாதி முன்னிலை வகித்தனர்  பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ, அஜ்முதீன் வரவேற்று பேடினார்  இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாலராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  கா, அண்ணாதுரை கலந்து கொண்டு புதிய பாதையினை திறந்து வைத்து  சிறப்புரை யாற்றினார்

இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் திமுக கலை இலக்கியக் கழக செயலாளருமான பழஞ்சூர் செல்வம், புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்து, வாழ்த்துரை வழங்கினார். தமிழாசிரியர் எம். உமர் பாரூக் தொகுப்புரையாற்றினார். அதிரை நகர் மன்ற தலைவர் தாஹிரா அப்துல் கரீம் துணை தலைவர் ராம குணசேகரன் எம் கே என் டிரஸ்ட் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடுகளை வழங்கினார்கள். 

கடந்த 25.06.1949 இல் இருபாலருக்குமான காதிர் முகைதீன் நடுநிலைப்பள்ளியை கண்ணியத்திற்குரிய  காயிதே மில்லத் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் அவர்கள் தொடங்கி வைத்த இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் கல்விக்காக குரல் எழுப்பிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் படம் இல்லை என்று பலரும் புலம்பி வருகின்றனர்

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்