Hot Posts

6/recent/ticker-posts

இன்றையஜாவியா புஹாரி ஷரீஃப் உபதேசம் (1/8/2022). கருத்து சுருக்கம்: அதிரை மவ்லவி,ஆலிம் முஹம்மது மசூத் .


 அல்லாஹ்வின் நல்லடியார்களே  அல்லாஹ்வின் படைப்பில் உயர்ந்த படைப்பாக அல்லாஹ் மனித படைப்பை படைத்துள்ளான் 

இருக்கின்ற வேதங்களில் உயர்ந்த வேதமாக அல்லாஹ் குரானை தந்துள்ளான் அதுபோன்று உயர்ந்த நபியை நமக்குதான் அல்லாஹ் தந்துள்ளான்

நபிமார்கள் அனைவரும்  குறிப்பாக பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மறுமை நாளில் பாவிகளில் சிலருக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஆனால், இதுவும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடைபெறும் என்பது கவனிக்கத் தக்கது. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

அல்லாஹ்வின் அனுமதியைப் பெற்ற பின்பே தவிர எந்தவொரு சிபாரிசு செய்பவருமில்லை இங்கு குறிப்பிடப்படும் (ஷபாஅத்) பரிந்துரை என்பது அல்லாஹ்வின் அனுமதி இல்லாது, சுயவிருப்பின் பேரில் செய்யப்படும் பரிந்துரையைக் குறிப்பதாக இருக்கலாம். அல்லது, தகுதியற்றோர் பரிந்துரை செய்வதைக் குறிக்கலாம். நபிமார்களோ, சுயவிருப்பின் பேரிலல்லாமல், அல்லாஹ்வின் அனுமதி யுடனேயே பரிந்துரை செய்வதும் அவர்கள் பரிந்துரை செய்வதற்கு முழுத் தகுதியும் உள்ளவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்  அனைத்து ஷபாஅத்துக்கான படிகளையும் தகர்த்து விட வேண்டாமெனவும், அவற்றை முடிந்தவரை அனைவரும் பேணிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்