அதிராம்பட்டினத்தில் புனிதம் நிறைந்த புஹாரி மஸ்லிஸ் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி
மொலவி சாதிக் ஆலிம் சிறப்புரை
அகில உலகமக்களின் நல்வாழ்விற்கும், ஆபத்தான நோயில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாற்ற பிரார்த்தனை.
அதிராம்பட்டினம் ஜுன் 01
80 ஆண்டுகளுக்கு முன்னர் அதிராம்பட்டினம் நகர பெரும்பாலான மக்கள் காலரா எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்பை சந்தித்தனர் இதனையடுத்து காலரா நோயை கட்டுப்படுத்த ஹஜ்ரத் ஷைகுனா ஆலீம் அவர்களின் ஆலோசனைப்படி 40 நாட்கள் புஹாரி ஷரீஃப் ஓதுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொடும் காலரா நோயால் பீடிக்கப்பட்டு உயிர் பலியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அன்று ஆரம்பித்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் காரணத்தினால் இன்று வரையிலும் அதிராம்பட்டினம் நகரில் காலரா நோய் ,மற்றும் ஆபத்தான நோய்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது அதிராம்பட்டினம் வரலாறாக உள்ளது.
இவ்வருடத்திற்கான ஹிஜ்ரி 1446 துல்காயிதா பிறை 29/ 28/05/2025 புதன்கிழமை காலை சிறப்புடன் இந்த நிகழ்ச்சி ஆரம்ப மானது 01/06/2025 இன்று ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் ரஹ்மானியா அரபிக்கல்லூரி முன்னால் மாணவரும் மௌலவி சாதிக் ஆலிம் அவர்களது சிறப்பு சொற்பொழிவில் கூறியதாவது:-
Social Plugin