கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் வெளிநாட்டு சதி உள்ளதாக மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் 6 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதல் அணுஉலை இந்த மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை காட்டி திடீரென சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. அங்கு கடந்த 3 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மற்றும் மத்திய நிபுணர் குழுவினர் கூடங்குளத்தில் தீவிர ஆய்வு செய்தனர். ‘உலகிலேயே அதிக பாதுகாப்புடன் அணுமின் நிலையம் உள்ளது. மக்கள் பயப்பட தேவையில்லை’ என்று கூறினர். ஆனாலும், அங்கு போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினரும் வேறு சில அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கு நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசும்போது, இன்னும் ஓரிரு வாரங்களில் கூடங்குளம் முதல் அணுமின் உலையில் மின் உற்பத்தி தொடங்கும். இரண்டாவது அணுஉலை 3 மாதங்களில் செயல்பட தொடங்கும். 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துவிட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடிவைக்க முடியாது என்று பகிரங்கமாக கூறினார். இதையடுத்து கூடங்குளத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பு தலைவர் உதயகுமார் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் 6 தொண்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் எந்தெந்த நாடுகளிடம் இருந்து பணம் அன்பளிப்பு வந்துள்ளது. அதை எந்தெந்த வகைகளில் செலவு செய்துள்ளீர்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களின் பெயரை மத்திய அரசு வெளியிட மறுத்துவிட்டது. எனினும், இந்த தொண்டு நிறுவனங்கள் மூலமே கூடங்குளம் எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு பணம் தரப்படுவதாக மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் திட்டத்தை தடுக்க வெளிநாட்டு சதி உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. பணம் இல்லாமல் எப்படி அவர்களால் 100 நாட்களாக போராட்டம் நடத்த முடியும். இதுகுறித்து மத்திய புலனாய்வு துறை (ஐபி) அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் குறித்த விஷயத்தில் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் தகவல் தொடர்பு இடைவெளி ஏற்பட்டு விட்டது. அதை சிலர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் 4வது தலைமுறை தொழில்நுட்பத்தை சேர்ந்தது. சுனாமி, பூகம்பம் ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாட்டில் உள்ள 20 அணுமின் நிலையங்களும் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை எந்த பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்புடன் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும் போது நவீன அறிவியல் வளர்ச்சியில் கண்ட அனுபவங்களின் அடிப்படையில் எல்லா குறைகளையும் களைந்து எதிர்காலத்தையும் மனதில் கொண்டு 4வது தலைமுறை தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்ப்பது மக்களை திசை திருப்பும் செயல். இதுகுறித்து தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Social Plugin