மரண அறிவிப்பு:
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது மீரா லெவ்வை மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், மர்ஹும் மு.அ அப்துல் வகாப்,மர்ஹும் மு.அ ஹாஜி அபுல் ஹசன்,மர்ஹும் மு.அ அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், MS. முஹம்மது ரஹ்மத்துல்லா,MS. மொய்தீன், MS முஹம்மது இக்ராம்,MS தமீம்.அன்சாரி, MS நல்ல அபூபக்கர் இவர்களின் தகப்பனாரும், மர்ஹும் NA முஹம்மது ஜக்கரியாஅவர்களின் மாமனாரும்மான ஹாஜி மு.அ முஹம்மது சாலீஹ் அவர்கள் மோட்டுக்கொள்ளை இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள் அன்னாரின் நல்லடக்கம் மஹ்ரிப் தொழுகை முடிந்ததும் தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
"கடந்த 100 வயதில் கடந்து வந்த பாதைகள்."
முஸ்லிம்லீக் பிறை கொடியின் மின்னும் நட்சத்திரமாக திகழ்ந்தவர்
மு அ. முஹம்மது சாலிஹ் ஹாஜியார்
அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக்கின் முன்னால் செயலாளர் பிறைக்கொடியின் மின்னும் நட்சத்திரமாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அதிராம்பட்டினம் நகரிலுள்ள மர்ஹும் அப்துல் காதர் ஆலிம்,அப்துல் லத்திப் ஆலிம் ஆகியோரின் அன்பை பெற்றவர்
கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அதிராம்பட்டினம் நகர ஊராட்சி மன்ற தேர்தலில் நடுத்தெரு 13 வது வார்டுக்கு போட்டி இட்ட மூவர்களில் இவர்கள் தான் சிறந்தவர் என்று இவருக்கு மகல்லா வாசிகள் உடன்பட்டு இவரை அன்னபோஸ்ட்டாக தேர்வு செய்யவேண்டும் என்று குரல் கொடுத்தவர்
பின்பு அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் வார்டு எண். 13 பகுதியில் தன்னுடைய பணிகளை தொடர்ந்தார் அப்போது தன்னுடைய சொந்த செலவில் வாய்க்கால் கட்டி அதிராம்பட்டினம் தக்வா பள்ளி அருகில் கடைத்தெரு மற்றும் கீழத்தெருவை இணைக்கும் பாலம் கட்டிய பெருமை இவர்களுக்கு உண்டு
பின்பு அன்ன போஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் அதிராம்பட்டினம் நகரின் ஆற்றல் மிக்க செயலாளராக இருந்து கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், சந்தன தமிழ் வித்தகர் சிராஜுல் மில்லத் ஆகியோரின் அன்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள் அதிராம்பட்டினம் வருகை தந்தபோது அவர்களை அழைத்து தொழில் அதிபர் ஹாஜி சம்சுதீன் ஹாஜியார் இல்லத்தில் தங்கவைத்து அனைத்து உதவிகளையும் அவர்களது குடும்பத்துடன் செய்து கொடுத்தனர் அப்போது அதிராம்பட்டினம் பகுதியில் துடிப்பு மிக்க முஸ்லிம் லீக்கர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு
மு அ. முஹம்மது சாலிஹ் ஹாஜியார் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஹிஜ்ரி 1346 ஆம் ஆண்டு முகரம் மாதம் பிறை ஏழாம் தேதி கிபி 1924 மேமாதம் 22ஆம் தேதி பிறந்தார்கள். தந்தை மு.அ. ஹசனா மரைக்காயர் சிறந்த ஆற்றல் மிக்கவராக இருந்தார்கள். மு.அ. ஹசனா மரைக்காயர் அவர்களது வழிகாட்டல் பிரகாரம் அதிராம்பட்டினம் அருகிலுள்ள மளவேனிர்காடு கிராமத்தில் உள்ள தோப்பில் ஏழைகளுக்கு வைத்தியம் செய்து வந்தனர் பின்பு ஹசனா மரைக்காயர் அவர்களது பிள்ளைகலான மர்ஹும் அபுபக்கர், மர்ஹும் அப்துல் வகாப், மர்ஹும் அபுல்ஹசன், மர்ஹும் அப்துல் ஜப்பார் ஆகியோர் தேங்காய் மற்றும் கீற்று வியாபாரம் செய்து வந்தனர் மர்ஹும் மு அ. ஹசனா மரைக்காயர் அவர்களது பிள்ளைகளின் உழைப்பை இன்று கிராம மக்கள் பாராட்டி வந்தனர் மெர்லும் இவர்கள் ஹோமியோபதி மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது.
ஆரம்பக் கல்வியை தங்களது சொந்த ஊரான அதிராம்பட்டினத்தில் கற்று முடித்து பின்பு கொழும்பு மற்றும் சென்னைக்கு வியாபாரம் சம்மந்தமாக சென்று தேறினார்கள் .அவர்கள் இன்று 30/11/2024. சனிக்கிழமை அதிகாலை அவர்களது இல்லத்தில் மரணமடைந்தார் அவர்களின் நல்லடக்கம் மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .
Social Plugin