தமிழகமெங்கும் நடைபெற்று வந்த சட்டபேரவை தேர்தல் இன்று மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. தமிழகத்தில் இந்த முறை எந்த வித அசம்பாவிதங்களும் அரங்கேறவில்லை.. முதல் முறையாக கல்லூரி மாணவர்களும்,மாணவிகளும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்த முறை தமிழகத்தில் 75 .21 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- திருவாரூர் தொகுதியில் 85 சதவீதமும்,சென்னையில் 65 சதவீதமும்,புதுவையில் 82 சதவீதமும்,கேரளாவில் 74 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
- 2001 ஆம் ஆண்டு தேர்தலில் 59 சதவீதம் வாக்குகள் பதிவானது.
- 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 84.9 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Social Plugin