Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் அளவில்லா மின்தடை..

              தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.மின்சார ஊழியர்கள் அவர்கள் விருப்பதிற்கேற்ப மின்சார நேரத்தை மாற்றியமைக்கின்றனர்.இதனை கண்டித்து அதிரை மக்கள் பல முறை அதிகாரிகளிடம் பல முறை பேசியுள்ளனர்.மின்சாரம் தடைப்பட்டு போன் செய்தால் முறையான பதில் தர மறுக்கின்றார்கள்.
   நேற்று 29/04/2011 காலை 9 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு மாலை 5 மணியளவில் வரும் என்று தெரிவித்திருந்தனர்.ஆனால் காலை 8 :30 மணிக்கே மின்சாரத்தை தடைசெய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு மின்சாரம் தரப்படவில்லை.மிகவும் பொறுமையாய் இருந்த அதிரை மக்கள் அதிராம்பட்டினம் (வண்டிப்பேட்டையில்) சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.வீடு எங்கும் குழந்தைகள் அலறிக்கொண்டு இருந்தனர்.சாலை மறியல் யார் தலைமையின்றியும் நடத்தப்படவில்லை.அதிரை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மறியலில் ஈடுப்பட்டனர்.இந்த சாலை மறியல் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேல் நடைப்பெற்றது.
பின்னர் நள்ளிரவு 12 :45 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
சுமார் 17 :15 மணி நேரம் மின்சாரத்தை தடைசெய்தது  குறிப்பிடத்தக்கது. 
நேற்று அதிரை நகரமே இருட்டில் மூழ்கியது.வீடுகளில் முதியவர்களும்,சிறியவர்களும் மிகவும் சிரமத்திற்கு  உள்ளாயினர்.இதனையடுத்து புதுத்தெருவில் தமீம்  என்பவர் கூறியதாவது:
  • "அதிரையில் மின்சார ஊழியர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப மின்சாரத்தை தடை செய்து கொண்டிருக்கின்றார்கள்.இதனால் போக்குவரத்து நெரிசல்களும்,விபத்துகளும் ஏற்ப்படுகிறது.