உயர் நீதி மன்றம் அதிரடி !!!
சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே அமல் படுத்தவேண்டும் என உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது .கடந்த திமுக ஆட்ச்சியின் பொழுது கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை அதிமுக பொறுப்பு ஏற்றவுடன் இதனை ரத்து செய்து சட்ட மன்றத்தில் சட்டம் இயற்றியது இதனால் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் பெரிதும் குழப்பத்தில் வகுப்பை நடத்தி வந்தனர் .
இந்த குழப்பத்திற்கு வடிகாலாக இன்று உயர்நீதி மன்றம் சமசீர் கல்வியை இந்த ஆண்டு முதலே அமல் படுத்த வேண்டும் எனவும் இதற்க்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மாணவ மணிகள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தை நாட "ஜெ" அரசு முடிவெடுத்துள்ளது !
Social Plugin