இன்னும் சில நாட்களுக்குள் வர இருக்கின்ற தியாகத் திருநாளாம் (ஹஜ்ஜு பெருநாளை) முன்னிட்டு இஸ்லாமியர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் இறைவன் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றை அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு அறுத்து பலி இடுங்கள் என்று அனைத்து இஸ்லாமியர்களுக்கு இறைவன் தன் திருமறையான குர்ஆனில் கட்டளை இட்டுள்ளான். இது குறித்து "அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே அறுத்துக் குர்பானி கொண்டுங்கள். அது கிடைக்காவிட்டால், செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்" நூல் முஸ்லிம்: 3971 .
மேலும், "(ஹஜ் பெருநாளன்று) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அருத்துவிட்டவர், அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப்பின்) அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் முஸ்லிம்: 3961 இந்த நபி மொழிகளை பின்பற்றும் விதத்தில் அனைத்து உலக இஸ்லாமியர்கள் வருடம், வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவன் பெயரைக் கொண்டு அறுத்து அந்த கறிகளை ஏழை, எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் கொடுப்பார்கள். இவற்றை அதிரை மக்கள் நிறைவேற்றும் விதமாக இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் மற்றும் மாடுகள் ஆகியவற்றை அதிரைக்கு ஏராளமான பிராணிகளை வரவழைத்துள்ளனர் . ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அதிரை பைத்துல்மால் சார்பில்ஏராளமான மாடுகள்,ஆடுகள் கூட்டு குர்பானி கொடுப்பதற்கு வாங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிரை பைத்துல்மால் சார்பில்ஏராளமான மாடுகள்,ஆடுகள் கூட்டு குர்பானி கொடுப்பதற்கு வாங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிரை நகரில் எங்கு பார்த்தாலும் ஆட்டு மந்தை களாகவே காட்ச்சியளிக்கின்றன .
Social Plugin