அஸ்ஸலாமு அலைக்கும்..
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே இன்னும் இரண்டு,மூன்று நாட்களில் நாம் எல்லோரும் இன்ஷா அல்லாஹ் புனித மிக்க (ஹஜ்ஜு பெருநாளை) கொண்டாட உள்ளோம்.
இந்த தருணத்தில் நாம் ஒன்றைதெரிந்து கொள்வோம்.
ஒருவரின் குணத்தை அவர் அணியும் ஆடைகளை வைத்து நிர்ணயம் செய்துவிடலாம்.பெண்கள்,தாம் அணியும் ஆடைகள் மற்றவர்களை ஈர்க்கும்படி அணியாமல் கண்ணியமாக இருக்க வேண்டும்.ஆனால் இன்றைய காலத்தில் ஆள் பாதி ஆடை பாதி என்று நியதி உள்ளது.இது இஸ்லாத்திற்கு முரண்பட்டது.பெண்கள் தன அழகை மற்றவர்கள் ரசிக்கும் படி ஆடை அணிய விரும்புகிறார்கள்.
மேலும் ஆடம்பரத்திர்க்காகவும்,பெருமைக்காகவும் ஆடை அணிகிறார்கள்.இது முற்றிலும் தவறு.இதனை தயவு செய்து பெண்கள் தவிர்ப்பது நல்லது.அனைத்து புகழும் அகிலங்கள் அனைத்தினையும் படைத்து பரிபக்குவப் படுத்துகின்ற இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது என்பதை மறந்து விடுகிறார்கள்.இதற்க்கு முக்கிய காரணம் சினிமா,தொலைகாட்சி போன்றவற்றில் நடிக்கும் நடிகைகளை போன்று நம் இஸ்லாமிய பெண்களும் தங்கள் உடலை மறைக்க ஆடை அணியாமல் மெல்லிய ஆடை அணிதல் போன்றவற்றை மற்ற இன மக்களை பார்த்து கற்று அதை பின்பற்றுகிறார்கள்.இவ்வாறு செய்வது குற்றமாகும்
அல்லாஹ் பாதுகாப்பானாக..!
.நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்;
எவர் பிறர் மதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுவாரோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் அல்லர்.
ஆகையால் நாம் இஸ்லாத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
வியாபாரிகள் விர்ப்பனைக்காக ஆடைகளை நடிகர்,நடிகைகள் பெயர்களை வைத்து விற்பனை செய்கிறார்கள்.அனைத்து மக்களும் அந்த ஆடைகளை வாங்குவதற்கும் அணிவதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆண்கள் அணியும் ஆடைகளை அணிய பெண்கள் விரும்புகிறார்கள்.இவ்வாறு செய்வது நம் மார்கத்தை இழிவுபடுத்துவதாகும்.
சில பெண்கள் டி.வி தொடர்களிலே மூழ்கி அந்த நடிகைகள் என்ன ஆடை அணிகிறார்களோ அந்த ஆடையை வாங்கி அணிவது,அவர்கள் எப்படி உடை அணிகிறார்களோ அப்படியே உடை அணிவது போன்ற மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.இதனை வீட்டில் இருக்கும் ஆண்கள் கண்டிப்பது இல்லை.
தங்கள் கணவன் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்க இங்கு பெண்கள் ஆடம்பர செலவுகளை செய்து வருகிறார்கள்.இது முற்றிலும் மார்க்கத்திற்கு புறம்பான ஒன்று.இதனை வீட்டில் உள்ள ஆண்கள் தான் சரி செய்ய வேண்டும்.
நாம் செய்யும் அனைத்து செயல்கல்களுக்கும் மறுமையில் கேள்வி உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ள வேண்டும்.பெண்கள் அணியும் ஆடையின் முறை, முகம் இரு கைகள், பாதங்கள் தவிர,உடல் முழுவதும் மரிக்கும்படியும்,தூய்மையாகவும் ஆடை தரையில் தொடாமல் இருக்கும்படி அணிய வேண்டும்.சிவப்பு நிற ஆடை மற்றும் பட்டாடைகளை அணிவதை ஆண்களுக்கும் நம் மார்க்கம் தடை செய்துள்ளது.பெண்களுக்கு அவ்வாறு எவ்வித தடையும் இல்லை.
எல்லா விதங்களிலும் உடைகள் அணிந்து கொள்ளலாம்.பெண்களிடம் இன்னொரு குறை உள்ளது.சில பெண்கள் வீட்டை விட்டு செல்லும் பொது பர்தா அணிவார்கள்.பர்தா அணிவது தவறில்லை.அனால் அந்த பர்தா மற்றவர்கள் பார்த்து ரசிக்கும் படி அணியக் கூடாது.பெண்கள் தம்மை தாமே காத்து கொள்ள வேண்டும்.
ஆகையால் நாம் அணியும் ஆடைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் நம் இஸ்லாமிய பெண்களை பாதுகாத்து அருள்வானாக.!
அல்லாஹ் நம் இஸ்லாமிய பெண்களை பாதுகாத்து அருள்வானாக.!
எல்லோருக்கும் "அதிரை குரல்" சார்பாக ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறோம்.
ஆக்கம்
அதிரை குரல்,
S.அப்துல் வஹாப்.
Social Plugin