Hot Posts

6/recent/ticker-posts

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் கல்வியில் உங்களின் உழைப்பு என்ன?

  

 நமது பிள்ளைகளின் கல்விக்கு நாம் தான் தூணாக இருக்க வேண்டும்.ஆனால் இன்று எத்தனைப் பெற்றோர்கள் அப்படி இருக்கிறோம்.சற்று சிந்தியுங்கள்..!
கல்வி என்பது உலகத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது.
மார்க்க கல்வி,உலக கல்வி இந்த இரண்டு கல்விகலுமே மிகவும் முக்கியமானது.நாம் இந்த இரண்டு கல்விக்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நமதூரில் GTC என்ற டியூஷன் சென்டர் அதிரை பைத்துல்மால் ஒத்துழைப்பினால்
  24-04-2009 வெள்ளிகிழமை அன்று துவங்கப்பட்டது.இந்த அகாடமி மூலமாக ஜீனியஸ் டுடோரியல் & டியூஷன் சென்டர் என்று துவங்கப்பட்டது.
+2 ,10  வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை தனித் தேர்வில் வெற்றி பெற செய்வதற்கு சிறப்பு பயிற்சி தருவதற்காக துவங்கப்பட்டது.

           இத்துடன் எல்.கே.ஜி முதல் +2  வரை பயிலும் மாணவ மாணவிகளுக்காக  ஜீனயுஸ் டியூஷன் சென்டர் துவங்கப்பட்டது.42 மாணவர்களுடன் துவங்கப்பட்ட நமது GTC -யில் தற்போது நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ,மாணவிகள் பயிற்சி பெற்று கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள்.
  •  2009 ஆண்டு மார்ச்சில் தோல்வியடைந்த மாணவ,மாணவிகளுக்கு ஜூன் மாத தனித் தேர்விற்கு கடுமையான பயிற்சி வழங்கப்பட்டதன் காரணமாக +2 ல் 90% தேர்ச்சியும்,10 ஆம் வகுப்பில் 87.4% தேர்ச்சியும் பெற்று துவங்கப்பட்ட ஒரே மாதத்தில் GTC சாதனை படைத்தது.
  • 2010 ஆம் ஆண்டில் மாணவ,மாணவிகள் மார்ச் தேர்வில் +2 வில் 100% தேர்ச்சியும்,10 ஆம் வகுப்பில் 91.3% தேர்ச்சியை பெற்று எமது GTC சாதனை படைத்தது.இதே போல் 2010 ஜூன்,அக்டோபர் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
  • 2011 ஆம் ஆண்டில் ஜூன்,அக்டோபர் தேர்வுகளில் அதிக மாணவர்கள் 
  • தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இந்த GTC இரண்டு ஆசிரியர்களுடன் துவங்கப்பட்ட நமது டியூஷன் சென்டர் -ல் தற்போது அதிரையில் 2 ஆசிரியர்கள்,8 ஆசிரியைகள் உட்பட 10 பேர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்றுவித்து திறன் மிக்க பயிற்சிகளை தங்களது அனுபவத்தின் மூலம் வழங்கி வருவது டியூஷன் சென்டர் -ன் சிறப்பம்சமாகும்.

  • அதிரையில் ஐ.எ.எஸ்,ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ். மத்திய அரசு தேர்வுகளில் அதிரை இளைஞர்களுக்காக பங்கு பெற செய்து வெற்றி அடைய செய்து அதிரை நகரத்திற்கு பெருமை தேடி தர GTC சென்டர் காத்திருக்கிறது.
  • இத்துடன் GTC மாணவர்களுக்கு,நம் இஸ்லாமிய நற் சிந்தனைகளையும் ஒழுக்கத்திற்குரிய தொழுகையையும்,மார்க்க நெறிகளையும்,ஓதுதலையும் போதித்து வருகிறது.
  • நமது GTC மூலம் தேர்வில் தோல்வியடைந்து வெற்றி பெற்ற மாணவர்களை பொறியியல் கல்லூரிகளிலும்,கலைக் கல்லூரிகளிலும்,பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் ஆகியவற்றில் சேர்ந்து பயன் பெற்று வருகிறார்கள்.
  • படிக்க முடியாத,படிப்பே வராத பிள்ளைகளுக்கு சிறப்பாக பயிற்சியளித்து அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதே நமது GTC யின் நோக்கம்.நன்றாக படிக்கும்,மாணவ,மாணவிகளை இந்த டியூஷன் சென்டர் -ல் சேர்ப்பது இல்லை.ஏனென்றால் நன்றாகப் படிப்பவர்களை எல்லோரும் பாராட்டுவார்கள்.ஆசிரியர்களுக்கும் பிடிக்கும்.ஆனால் இந்த படிக்காத மாணவர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள்.ஆனால் நமது GTC  சென்டர் -ல் படிக்காத மாணவர்களை கடும் உழைப்பினால் படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.இதில் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி என்னை அழையுங்கள்.
  • தற்போது நம் அதிரை நகரில் ஏராளமான டியூஷன் சென்டர்கள் (தற்சமயம் 52 மையங்கள்) ஆங்கங்கே தெருக்களில் துவங்கப்பட்டு நடைபெற்றாலும் அதிரையில் நமது பைத்துல்மால் GTC டியூஷன் சென்டர் பெற்றோர்கள்,மாணவர்கள் மத்தியில் தரமான கல்வியை தருவதில் சிறப்பு மிக்க டியூஷன் சென்டர் என்ற நற்பெயர் பெற்று அல்லாஹ் வின் துணையால் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • வெளிநாடுகளில் உள்ள நம் அதிரை பெருமக்கள் நமது டியூஷன் சென்டர் -ல் தரமிக்க பயிற்சிகளில் திருப்தியடைந்து தங்களது பிள்ளைகளை மட்டுமின்றி,உறவினர் பிள்ளைகளையும் தெரிந்தவர் பிள்ளைகளையும் பைத்துல்மால் டியூஷன் -ல் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பல்வேறு உதவிகள் செய்து தருகின்றனர்.
  • மேலும் ஏழ்மை நிலையில் உள்ள நம் ஊர் படித்த பெண்களுக்கு நல்லதோர் சேவையாற்றிட வேலைவாய்ப்பினை வழங்கிட முடிந்தமைக்கு நமது டியூஷன் சென்டர் பெருமிதம் அடைகிறது.
           அன்பார்ந்த பெற்றோர்களே உங்களது பிள்ளைகளும் படிப்பிலும்,மார்க்க கல்வியிலும் முன்னேற்றம் காண வேண்டாமா?
அதிரை நகரத்திற்கு கல்வியில் ஒரு பெருமை சேர்த்திடவே GTC  டியூஷன் சென்டர் இயங்கி வருகிறது.
நமதூர் அதிரை கல்வியில் பின்தங்கியுள்ளது.அந்த குறைகளை போக்கி மாணவச் செல்வங்களை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்ற உறுதியான துடிப்புடன் இந்த   GTC டியூஷன் சென்டர் இயங்கி கொண்டிருக்கிறது.
      தங்களது பிள்ளைகளை இந்த GTC டியூஷன் சென்டர் -ல் சேர்த்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு நீங்களும் பாடுபடுங்கள்.

நன்றி செலுத்துகிறோம்;

  • 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் GTC யின் மேல் மாடியில் கூரை போட 

14,000/-ரூபாய் நன்கொடையாக வழங்கிய மாணவர்களுக்கு GTC யின் சார்பாக நன்றியை தெர்வித்து கொள்கிறோம்.

  • முன்னால் மாணவர்கள் கம்ப்யூட்டர்,மின் விசிறி,மின் உபகாரனங்கள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி தாங்கள் கற்ற GTC யை பெருமைப்படுத்தி வருவதை எந்த டியூஷன் சென்டர் க்கும் இல்லாத சிறப்பம்சம்.
  • மேலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க பரிசுப் பொருட்கள் நன்கொடைகள் தந்த பேருள்ளங்களுக்கு எண்களின் மனமார நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
  • எல்லாம் வல்ல இறைவன் நன்கொடைகள் வழங்கிய அனைவருக்கும் நல்லருளை வாரி வழங்குவானாக என துஆ செய்கிறோம். 

                                                                   இப்படிக்கு,
                                                            S.ரஷீத் அலி M.A (சைக்கலாஜி)
                                                                      முதல்வர்,
                                           ஜீனியஸ் டுடோரியல் காலேஜ் & டியூஷன் சென்டர் ,
                                                         அதிராம்பட்டினம்-614701 
                                                தொடர்புக்கு; 9043108798